இலங்கை மற்றும் இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கு இடையிலான முதலாவது இளையோர் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.
காலியில் நடைபெற்ற இந்தப் போட்டியின் கடைசி நாளான நேற்று (16) இலங்கை இளையோர் அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்கு 155 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. எனினும் ஆட்ட நேர முடிவில் இலங்கை இளையோர்கள் —39.1 ஓவர்களில் –06 விக்கெட்டுகளை இழந்து —178 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை சமநிலையில் முடித்தனர்.
இலங்கை அணி ஓட்டம் பெறுவதற்கு முன்னரே முதல் விக்கெட்டை இழந்தபோதும் மறுமுனை ஆரம்ப வீரர் துல்னித் சிகேரா 72 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்த இளையோர் டெஸ்ட் போட்டியில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி முதல் இன்னிங்ஸில் 424 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய இளையோர் அணி 576 ஓட்டங்களைப் குறித்தது.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி இளையோர் டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஜூலை 20 ஆம் திகதி கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.




