கோமாவிற்கு சென்ற நபர் – பல ஆண்டுகளாக காலை கடித்து கணவரை மீட்ட மனைவி

2 Min Read

கோமாவிற்கு சென்ற கணவரின் காலை பல ஆண்டுகளாக கடித்து அவரது மனைவி அவரை சுயநினைவுக்கு வரவைத்துள்ளார்.

கோமாவிற்கு சென்ற நபர்

சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் நீர் புகா தடுப்புப் பணியாளரான(waterproofing worker) ஜாவோ ஜின்கியான்.

2019 அக்டோபரில், சிக்கிக்கொண்டிருந்த 3 வயதுக் குழந்தையை மீட்பதற்காக, ஜாவோ ஒரு கிடங்கின் கூரை மீது ஏறி, குழந்தையைத் தன் கைகளில் ஏந்தியபடி, சுமார் 6 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்தார். இருவரும் தரையில்  விழும்போது, ​​தன் உடலால் அக்குழந்தையைப் பாதுகாத்தார்.

கோமாவிற்கு சென்ற நபர் - பல ஆண்டுகளாக காலை கடித்து கணவரை மீட்ட மனைவி | China Wife Wakes Coma State Husband By Biting Toes

அதில் குழந்தை பாதுகாப்பாக காப்பாற்றப்பட நிலையில், ஜாவோ தலைகீழாகக் கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் கடுமையான காயங்களும் பல எலும்பு முறிவுகளும் ஏற்பட்டுள்ளது.

ஜாவோ கண்விழிப்பதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு எனவும், அவர் உயிர் பிழைத்ததே ஒரு அதிசயம் எனவும் மருத்துவர்கள்தெரிவித்தனர்.

ஜாவோவின் மனைவியான, மழலையர் பள்ளி கலை ஆசிரியையான 45 வயதான சோங் மே, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு வீட்டிலேயே இலவசமாக ஓவியம் வரையும் வகுப்புகளைக் கற்பித்து வந்தார்.

கணவரை முழு நேரமாக கவனித்து கொள்வதற்காக தனது வேலையை விட்டுள்ளார். குடும்பத்தின் சேமிப்பு விரைவாக தீர்ந்த நிலையில், இணையத்தில் ஓவியங்களை விற்க தொடங்கியுள்ளார்.

பல ஆண்டுகளாக காலை கடித்த மனைவி

நரம்பு மீட்சிக்கு உதவுவதற்காக ஜாவோவின் விரல்களையும், கால்விரல்களையும் தூண்டுமாறு மருத்துவர்கள் அவரது மனைவிக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

ஜாவோவின் கால்விரலைக் கடித்தபோது, தற்செயலாக ​​ஒரு மெல்லிய எதிர்வினையைக் கவனித்த அவர், அப்போது முதல் ஜாவோவின் பாதத்தை ஒரு நெகிழிபையால் மூடி, பல ஆண்டுகளாக கால்விரல்களைத் தொடர்ந்து கடித்து வந்துள்ளார்.

இதன் விளைவாக 2024 ஆம் ஆண்டில் ஜாவோ தனது கண்களைச் சிறிதளவு திறக்கத் தொடங்கியுள்ளார். ஆனால் பேசவோ நகரவோ முடியாவில்லை.

அவருக்காக தினமும் பாட்டு பாடுவார். மேலும் பல ஆண்டுகளாக அவரை கவனித்து கொள்வதற்காக இரவில் 4 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்கியுள்ளார்.

அதன்பின்னர், ஜாவோவால் பேச்சைப் புரிந்துகொள்ளவும், பதிலுக்குக் கையை உயர்த்தவும், உதவியுடன் சிறிது நேரம் எழுந்து நிற்கவும் முடிந்தது.

கடந்த ஜூன் 30 ஆம் திகதி, மருத்துவமனைப் படுக்கையில் இருந்தபோது, ​​ஜாவோ தன் மனைவியிடம் திரும்பி, “சாங் மே, i love you” என்று கூறியுள்ளார்.

எழுத்துப் பயிற்சியின் போது, ​​ஜாவோவால் தன் மனைவியின் பெயரைத் தவிர வேறு எந்த வார்த்தையையும் எழுத முடியவில்லை.

முன்னதாக சமூகவலைத்தளத்தில், “முன்னால் இருக்கும் பாதை கடினமானது என்று எல்லோரும் சொல்கிறார்கள், ஆனால் கணவன் மனைவி இருவரும் கஷ்டங்களை ஒன்றாகச் சமாளிக்கவே படைக்கப்பட்டவர்கள்.

அதற்கான சிறந்த தீர்வு எனக்குத் தெரியாது. ஆனால் இத்தனை நீண்ட ஆண்டுகளையும் கடந்து செல்ல நான் தயாராக இருக்கிறேன்” என்று எழுதியிருந்தார்.

மீட்கப்பட்ட குழந்தையின் தந்தை தன்னிடம் போதிய வசதிகள் இல்லாத நிலையிலும், ஜாவோவின் சிகிச்சைக்காக அவர் 45,000 யுவானை (இந்திய மதிப்பில் ரூ.6.30லட்சம்) கடனாக திரட்டி வழங்கியுள்ளார்.சாங் மேவின் அர்பணிப்புக்காக இந்த நிகழ்வு, சீன சமூக ஊடங்களில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *