2050ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு இருக்கும் தெரியுமா?

1 Min Read

பொதுவாக தங்க நகைகளை அனைவருமே ஒரு பெரிய முதலீடாக பார்க்கின்றனர்.

சமீப காலமாக, தங்கத்தின் விலை கூடுதலாக இருக்கின்ற நிலையில், நகை வாங்க முடியாத சிரமத்தில் பல பேர் இருக்கின்றனர்.

அதேபோல், இந்தியாவில் தங்கம் என்பது மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது.

அந்தவகையில், 2050ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

2050ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு இருக்கும் தெரியுமா? | What Price Of 10 Grams Of Gold Will Be In The 2050

கடந்த 1999-2000 ஆம் ஆண்டுகளில் 10 கிராம் தங்கத்தின் விலை வெறும் ரூ. 4,000 முதல் ரூ. 4,500 என்ற அளவில் மட்டுமே இருந்தது.

தற்போது 24 கேரட் 10 கிராம் தங்கம் ரூ.1,45,410, 22 கேரட் தங்கம் ரூ.1,33,300 என்ற உச்ச விலையில் விற்பனையாகிறது.

25 ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அதன் மதிப்பு இன்று ரூ.32 லட்சத்திற்கும் மேல் உயர்ந்திருக்கும்.

தங்கத்தின் விலை இன்னும் உயர வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

2050ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு இருக்கும் தெரியுமா? | What Price Of 10 Grams Of Gold Will Be In The 2050

 

கேடியா அட்வைசரி நிறுவனத்தின் தலைவர் அஜய் கேடியா, தங்கத்தின் நீண்டகால வளர்ச்சி தொடரும் என கணித்துள்ளார்.

அதே வளர்ச்சி தொடர்ந்தால், 2050ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.4.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை உயரலாம் என்று மதிப்பிடப்படுகிறது.

பூமியில் தங்கத்தின் இருப்பு குறைவாக உள்ளதால் அதன் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், நீண்டகாலத்தில் தங்கத்தின் விலை உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *