18 – 22 வயது இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரல்

2 Min Read

அடுத்த தலைமுறை ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கும் மற்றும் நவீன டிஜிட்டல் ஊடகத் திறன்களைக் கொண்ட சமூகப் பொறுப்புள்ள ஊடகவியலாளர்களை உருவாக்கும் நோக்கில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் (SLMMF) புதியதொரு ஊடகவியல் பயிற்சித் திட்டத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்படவுள்ள இத் 6 மாத கால நேரடி மற்றும் இணையவழிப் பயிற்சித் திட்டத்திற்கு, நாடு தழுவிய ரீதியில் 50 பங்கேற்பாளர்கள் மாத்திரமே தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தலா இருவர் வீதம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

பாரம்பரிய செய்தி அறிக்கையிடல் மற்றும் நவீன டிஜிட்டல் திறன்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்பாடத்திட்டத்தில் பின்வரும் முக்கிய விடயங்கள் கற்பிக்கப்படவுள்ளன:
• அடிப்படை அறிக்கையிடல்: ஆற்றல்மிக்க எழுத்தாக்கம், செய்தியறிக்கையிடல், விவரணக் கட்டுரை மற்றும் புலனாய்வு ஊடகவியல்.
• டிஜிட்டல் மற்றும் காட்சி ஊடகம்: வீடியோகிராபி, புகைப்படம் எடுத்தல் மற்றும் மொபைல் ஊடகவியல் (MoJo).
• அடுத்த தலைமுறை திறன்கள்: தரவு ஊடகவியல் (Data Journalism), இணையப் பாதுகாப்பு (Online Safety) மற்றும் நடைமுறை செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு.
• ஊடகச் சட்டம்: தகவல் அறியும் உரிமை (RTI) சட்டத்தின் பயன்பாடு.
18 முதல் 22 வயதுக்குட்பட்ட, உயர் தரம் (A/L) அல்லது அதற்கு இணையான கல்வியைப் பூர்த்தி செய்த ஆர்வம் மிக்க முஸ்லிம் இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் குறைந்தந்தது இரண்டு மொழிகளில் சரளமான தேர்ச்சியும், எழுத்தாற்றல், நடுநிலைமை மற்றும் சமூகப் பொறுப்புணர்வு கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தெரிவு செயல்முறை மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக அமையும். சுயவிபரம், நுழைவுத் தேர்வு, நேர்காணல் மற்றும் குழு கலந்துரையாடல் ஆகியவற்றின் அடிப்படையில் பங்கேற்பாளர்கள் தெரிவு செய்யப்படுவர்.

விண்ணப்பங்கள் மற்றும் மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள SLMMF பயிற்சி செயலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

பயிற்சி தொடர்பான மேலதிக விபரங்களுக்கு: பிரதான பயிற்றுவிப்பாளர் ஷிஹார் அனீஸை 0773763577 (WhatsApp) எனும் இலக்கத்தினூடாகவும், shiharaneez@gmail.com மின்னஞ்சல் ஊடாகவும் தொடர்பு கொள்ளலாம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *