Laugfs எரிவாயு சிலிண்டர்கள் ரூ. 1,280, ரூ. 512 இனால் குறைப்பு

1 Min Read

இன்று நள்ளிரவு (04) முதல் அமுலாகும் வகையில் Laugfs சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய,

  • 12.5kg சிலிண்டர்: ரூ. 1,280 இனால் குறைப்பு
  • 5kg சிலிண்டர்: ரூ. 512 இனால் குறைப்பு

அதன் அடிப்படையில்,

  • 12.5kg: ரூ. 6,245 இலிருந்து ரூ. 4,965 ஆக ரூ. 625 இனால் குறைப்பு
  • 5kg: ரூ. 2,500 இலிருந்து ரூ. 1,988 ஆக ரூ. 512 இனால் குறைப்பு

லாஃப்ஸ் கேஸ் (Laugfs Fas) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் இறுதியாக கடந்த மே மாதம் பின்வருமாறு அதிகரிக்கப்பட்டிருந்தன.

  • 12.5kg: ரூ. 5,700 இலிருந்து ரூ. 6,245 ஆக ரூ. 545 இனால் அதிகரிப்பு
  • 5kg: ரூ. 2,280 இலிருந்து ரூ. 2,500 ஆக ரூ. 220 இனால் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு (04) முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *