அப்புத்தளை கீழ், விஹாரகலை, ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்

4 Min Read

மா ரியம்மன் வழிபாடு என்பது தமிழ் கலாச்சாரத்தில் மிகவும் பழமையான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கிராமிய மற்றும் சக்தி வழிபாடாகும். ‘மாரி’ என்றால் மழை. வெப்பத்தைப் போக்கி, மழை பொழிந்து, பூமியைக் குளிர்வித்து நோய்களைக் குணமாக்கும் தாயாக இந்த அம்மன் போற்றப்படுகிறாள்.

மாரியம்மன் வழிபாட்டில் ஆன்மீகமும் மருத்துவமும் வேளாண் விஞ்ஞானமும் இணைந்துள்ளது. மாரியம்மனின் பிரசாதம் என்று நோயாளிக்கு கொடுக்கும் போது இறை நம்பிக்கையின் அடிப்படையில் நோயாளிக்கு சுகமாகின்றது.

இறை நம்பிக்கை என்பது மனிதனுக்குள் ஆக்கபூர்வமான அதிர்வலைகளை ஏற்படுத்தும். இது விஞ்ஞான கண்டுபிடிப்பாக இன்றைக்குத் தோன்றினாலும் பழங்காலத்தில் இருந்தே நம்முள் இந்த நம்பிக்கையும் நம்பிக்கை சார்ந்த நோய் தீர்க்கும் முறைகளும் ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது.

இதில் அதிசயம், அற்புதம் என்று எதுவும் இல்லை. எல்லாமே மருத்துவ அறிவியல் தான். அம்மன் காப்பு என்னும் அரிய மருந்தை நம்பிக்கையோடு உட்கொள்ளும்போது அது சர்வ ரோக நிவாரணியாகச் செயல்படுகிறது.

மாரியம்மன் கோயில்களில் முளைப்பாரி எடுப்பது முக்கியமான் வழிபாடாகும். முளைப்பாரி எடுக்கும் பெண்கள் தங்கள் வீட்டில் மண் ஓட்டில்/ மண் தொட்டியில் நவதானிய விதைகளை விதைத்து வைப்பர். இச்சடங்கு முத்து போடுதல் எனப்படும். இந் நிகழ்வு முதல் செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் சாட்டப்படும் நாளில் நடக்கும். அன்று மாரியம்மன் திருவிழாவிற்கான அறிவிப்புச் செய்யப்படும்.

.அதன்பிறகு யாரும் வெளியூர்களில் போய் தங்க கூடாது. அசைவம் கூடாது. போக பத்தியமும் உண்டு. இரண்டாவது செவ்வாயில் விளைந்து பசும்பொன் நிறத்தில் இருக்கும் நவதானியச் செடிகள் உள்ள மண் சட்டியை தலை மீது வைத்து கோயிலுக்கு எடுத்து சென்று தானானே கொட்டுவர். இவ்வாறு சிறப்பு பெற்ற மாரியம்மனுக்கு அப்புத்தளை கீழ் விஹாரகலையில் ஆலயம் அமைக்கப்பட்டது. இந்த ஆலயம் பழமையான மிகவும் சக்தி வாய்ந்த ஆலயமாக இன்றும் திகழ்கிறது.

அப்புத்தளை கீழ், விஹாரகலை, ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்

இறைவன் அருள்பெற்ற வன்தொண்டராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகளாலும் நற்றமிழ்வல்ல ஞானசம்பந்த பெருமானினதும் முறையே, பாடல் பெற்ற திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம், கதிர்காமம் ஆகிய புண்ணிய ஸ்தலங்களை தன்னகத்தே கொண்டதும், மாணிக்க கங்கையினால் புனிதமடைந்தும், இந்து சமுத்திரத்தின் மத்தியிலே இரத்தின தூபியாம் இயற்கை வனச்சோலை சிவபூமி, சுவர்ணபூமி என விளங்கும் இலங்கை திருநாட்டின், ஊவா மாகாணத்தின், அப்புத்தலை கீழ் விஹாரகலை, நிக்கபொத்த எனும் பதியில் வாழுகின்ற ஜீவாத்மாக்கள் இன்புற்று வாழவென அபயகரம் கொண்டு தோற்றமுற்ற அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி அகில லோக மாதா அன்னை ஸ்ரீ முத்துமாரியம்பாளுக்கும், ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, காலை 9.45 மணி முதல் 10.45 மணிவரையுள்ள சுபமுகூர்த்த வேளையில், மஹா கும்பாபிஷேகம் திருக்குடமுழுக்கு பெருஞ்சாந்தி நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 03ஆம் திகதி அப்புத்தளை கீழ், விஹாரகலை, அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன அஸ்டபந்தன, பஞ்சாக்கினிகுண்ட பக்ஷ்க்ஷ, பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்திக்கு கர்மாரம்பமாகும்.

03-07-2026, வெள்ளிக்கிழமை அதிகாலை 4.45 மணிமுதல் கர்மாரம்பம் – விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், தேவ பிராமண அனுக்ஞை, ஆச்சார்ய வர்ணம், பிரதிஸ்டா சங்கல்ப்பம், திரவியசுத்தி, . திரவியவிபாகம், பேரீதாடனம், யந்திரபூஜை, ஆதித்தியாக்கினி, மஹா கணபதிஹோமம், லக்க்ஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம், இரஷஹன ஹோமம், திசா ஹோமம், சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், நூதன மூர்த்தி பட்டண பிரவேசம், கங்காதீர்த்தம், ஜலாதிவாசம், தானியாதிவாசம், சயணரோஹணம் ​ஆகிய கிரியைகள் செய்யப்பட்டு விபூதி பிரசாதம் வழங்கப்படும்.

அன்று பி.ப 4.30 மணிமுதல் – விநாயகர் வழிபாடு, புண்ணியாக வாசனம், கிராமசாந்தி, பிரவேசபலி, வாஸ்துசாந்தி, மிருதசங்கிரகணம், அங்குரார்ப்பணம், ஆசாரியார் ரட்ஷபந்தனம், தர்மதவாஜாரோகணம் பிரசன்ணா அபிஷேகம், விஷேட பூஜை கடகஸ்தாபனம், கலாகர்ஷணம், சண ஹோமம், கும்ப யாகசாலை பிரவேஷம், தூபிஸ்தாபனம் தீப பூஜை, தீபஸ்தாபனம், யந்திரபூஜை, யந்திரஸ்தாபனம், விம்பஸ்தாபனம், அஸ்பந்தனம் முதலாம் கால பஞ்சாக்கினி காரியம், மூலமந்திர ஹோமம் தீபாராதனை வேத ஸ்தோத்திர திருமுறை பாராயணம் விபூதி பிரசாதம் வழங்கல் என்பன இடம்பெறும்.

எதிர்வரும் 04ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை எண்ணெய்க் காப்பு இடம்பெறும்.

ஆகம வித்தகன் சிவஸ்ரீ தவ. தினேஸ்வர குருக்கள், கிரியாரத்தினம் சிவஸ்ரீ லம்போதர சிவாச்சாரியார், மூர்த்தி சிவாச்சாரியார், ஈசான சிவாச்சாரியார், சிவஸ்ரீ சிவநேச லவகுமார குருக்கள், சிவஸ்ரீ அனாகய குருக்கள், சிவஸ்ரீ சிவகுமார குருக்கள், கிரியா துரந்தரர் சிவஸ்ரீ இரா.சாந்த குருக்கள் , சிவஸ்ரீ சர்வ மோகனரூப குருக்கள், சிவஸ்ரீ மணி. குகனேந்திர குருக்கள் ஆகியோர் கும்பாபிஷேக கிரியைகளை செய்வார்கள். ஆலய பூசகர் K.சிவநேசன் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

சர்வசாதகி சிவஸ்ரீ கலோசேந்தன் சர்மா, யாக சம்ரக்ஷகர்கள் சிவஸ்ரீ பிரபுதர சர்மா, பிரம்மஸ்ரீ ரெ.கோபி சர்மா , பிரம்மஸ்ரீ ரெ.குருமூர்த்தி சர்மா, சிவஸ்ரீ கெ.யசோதரன் , சிவஸ்ரீ சிவகஜன் சர்மா ஆகியோர் யாக சம்ரக்ஷகர்களாக தங்களது திருப்பணிகளை செய்வார்கள்.

கிக்கிரிவத்தை சிற்பாச்சாரியார் மங்கள வாத்தியம் முழங்க லெவித் பிரதாப் சிவயோக பாலு குழுவினர், G.கார்த்தி (மயிலாடுதுறை) தங்களுக்குரிய இறைபணிகளை செவ்வனே செய்வார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *