பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியில் நேபாள வீரர் திபெந்திரா சிங்கிற்கு பதில் ஆட இலங்கை இளம் துடுப்பாட்ட வீரர் பவன் ரத்நாயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இஸ்லாமாபாத் யுனைடெட் அணியால் 6 மில்லியின் ரூபாவுக்கு வாங்கப்பட்ட திபெந்திரா, தொடர்ந்து ஆட முடியாத நிலையில் அந்தத் தொகையில் 70 வீத பங்கான 4.2 மில்லியன் ரூபாவை பெறவுள்ளார். முதல் முறையாக பாக். சுப்பர் லீக்கில் அறிமுகம் பெறும் பவன் ரத்நாயக்க எஞ்சிய 1.8 மில்லியன் ரூபாவை பெறவுள்ளார்.

லங்கா பிரீமியர் லீக்கில் ஆடி இருக்கும் 23 வயது பவன், லீக் கிரிக்கெட்டில் அதிக அனுபவம் இல்லாதபோதும், இலங்கை டி20 அணிக்காக திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் இதுவரை ஆடிய 12 டி20 சர்வதேச போட்டிகளில் 266 ஓட்டங்களை பெற்றிருப்பதோடு, இதன்போது இரு அரைச்சதங்களுடன் 146.96 ஸ்ட்ரைக் ரேட்டை பதிவு செய்துள்ளார்.
பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி இதுவரை ஆடிய 7 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்விகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது. இஸ்லாமாபாத் அணி இம்முறை தொடரில் தனது அணியை கட்டி எழுப்புவதற்கு செலவிட முடியுமான 505 மில்லியன் ரூபா மொத்த தொகையில் 494.75 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



