எஷான் மாலிங்கவின் அபார பந்துவீச்சின் மூலம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபத் அணி 10 ஓட்டங்களால் வெற்றியிட்டியது.
ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் முன்னிலை பெற போராடி வரும் சென்னை மற்றும் சன்ரைசஸ் அணிகள் நேற்று முன்தினம் (18) ஹைதராபாத்தில் பலப்பரீட்சை நடத்தின. முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட சைன்ரைசஸ் அணி 20 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்றது. அபிஷேக் ஷர்மா மற்றும் ஹெயின்ரிச் கிளாசன் ஆகியோர் அதிரடியாக 59 ஓட்டங்களை விளாசினர்.

பதிலெடுத்தாட வந்த சென்னை அணியின் முக்கிய மூன்று விக்கெட்டுகளை மாலிங்க வீழ்த்தினார். இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களையே பெற்றது. மாலிங்க தனது 4 ஓவர்களுக்கும் 29 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இந்த வெற்றியுடன் சன்ரைசஸ் அணி புள்ளிப் பட்டியில் 4 ஆவது இடத்திற்கு முன்னேறியதோடு சென்னை 7 ஆவது இடத்தில் உள்ளது.
இதேவேளை நேற்று முன்தினம் நடைபெற்ற மற்றொரு போட்டியில் நடப்புச் சம்பியன் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருவை டெல்லி கெபிடல்ஸ் 6 விக்கெட்டுகளால் வீழ்த்தியது.



