இரண்டு வார போர் நிறுத்தம்… புதைத்து வைத்திருந்த ஏவுகணைகளை வெளியே எடுத்த ஈரான்

2 Min Read

ஈரான் போர் தொடர்பில் அமெரிக்காவின் இரண்டு வார கால போர் நிறுத்தம் முடிவுக்கு வரவிருக்கும் நிலையில், புதைத்து வைத்திருந்த ஏவுகணைகளை ஈரான் வெளியே எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிலத்தடி ஏவுகணை

வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்களில், ஈரான் இந்த போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி, தனது நிலத்தடி ஏவுகணைத் தளங்களுக்கான பாதையைச் சீரமைத்து வந்துள்ளது.

இரண்டு வார போர் நிறுத்தம்... புதைத்து வைத்திருந்த ஏவுகணைகளை வெளியே எடுத்த ஈரான் | Iran Dig Out Buried Missile

மேலும், தங்கள் மீதான தாக்குதல் முடிவுக்கு வரவில்லை என்றால், ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பாப் அல்-மண்டப் நீரிணையும் கப்பல் போக்குவரத்திற்கு முடக்கப்படும் நெருக்கடி உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகளின் திடீர்த் தாக்குதல்கள், ஈரானின் அந்த நிலத்தடி ஏவுகணைத் தளங்களின் நுழைவாயில்களையும் வெளியேறும் வழிகளையும் சேதப்படுத்தியுள்ளது.

இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் கூறப்படுகிறது. இதனால், ஈரானின் பதிலடியைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா திட்டமிட்டிருந்தது.

தப்ரிஸ் மற்றும் கொமெய்னில் உள்ள தளங்களின் நுழைவாயில்களில் இருந்த தடைகளை நீக்குவதற்காக, இடிபாடுகள் அள்ளப்பட்டு அகற்றப்படுவதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

மேலும், 40 நாட்கள் போர் முன்னெடுக்கப்பட்டும் ஈரானின் ஏவுகணை ஏவுதளங்களில் சுமார் பாதி இன்னும் சேதமடையாமல் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இரண்டு வார போர் நிறுத்தம்... புதைத்து வைத்திருந்த ஏவுகணைகளை வெளியே எடுத்த ஈரான் | Iran Dig Out Buried Missile

ஆனால், பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் தெரிவிக்கையில், ஈரானின் ஏவுகணை பலத்தை செயலிழக்கச் செய்து, அந்த நாட்டை வரவிருக்கும் பல ஆண்டுகளுக்குப் போரிட இயலாத நிலைக்குத் தள்ளியதாக குறிப்பிட்டுள்ளார்.

கப்பல்கள் மீது முற்றுகை

அமெரிக்க அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கையில், ஈரான் தனது புதைக்கப்பட்ட ஏவுகணை ஏவுதளங்கள் பலவற்றைத் தோண்டியெடுத்துச் சீரமைக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

வளைகுடாப் பகுதியில் உள்ள ஈரானியத் துறைமுகங்களுக்குச் செல்லும் கப்பல்கள் மீது முற்றுகையை விதித்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா அப்பிராந்தியத்திற்கு மேலும் அதிக படைகளைக் குவித்து வரும் நிலையிலேயே, ஈரானின் ஏவுகணைகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு வார போர் நிறுத்தம்... புதைத்து வைத்திருந்த ஏவுகணைகளை வெளியே எடுத்த ஈரான் | Iran Dig Out Buried Missile

ஹார்முஸ் நீரிணையில் முற்றுகை அமுலுக்கு வந்துள்ளதாக அமெரிக்கா அறிவித்திருந்த நிலையிலும், சில கப்பல்கள் நீரிணையைக் கடந்துள்ளதாகவும் தரவுகள் வெளியாகியுள்ளது.

இதனிடையே, ஈரான் போர் முடிவுக்கு வரவிருப்பதாக குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அடுத்த சில தினங்களில் பேச்சுவார்த்தைகள் தொடங்க உள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *