பிரான்ஸுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா.வில் அமெரிக்கா வெளிநடப்பு

1 Min Read

மனித உரிமைகள் மீதான வொஷிங்டனின் வாக்கெடுப்பை, சர்வாதிகார நாடுகளின் வாக்கெடுப்புடன் ஒப்பிட்ட பிரான்ஸின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்கா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திலிருந்து நேற்று முன்தினம் வெளிநடப்பு செய்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு எதிராக வட கொரியா, ரஷ்யாவுடன் அமெரிக்காவும் இணைந்து வாக்களித்தபோது, பிரான்ஸுடன் இந்த இராஜதந்திர சர்ச்சை முதலில் ஆரம்பமானது. வாக்கெடுப்பின் பின் பிரான்சின் ஐ.நா. தூதரகம், அமெரிக்காவை விமர்சித்ததோடு வட கொரியா, ரஷ்யாவுடனும் ஒப்பிட்டது.

அமெரிக்கா ஒரு காலத்தில் மனித உரிமைகளின் கலங்கரை விளக்கமாக இருந்தது. இனி இல்லை’ என்றும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, அமெரிக்கத் தூதர் மைக் வால்ட்ஸ், ஜனநாயக நாடுகளுக்கு உபதேசம் செய்து கொண்டே உலகின் மிக மோசமான அடக்குமுறையாளர்களுடன் நெருக்கமாகப் பழகும் ஒரு மனித உரிமைகள் தலைவருக்கு பிரான்ஸ் வாக்களித்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

144 நாடுகளின் ஆதரவுடனும், 10 நாடுகளின் எதிர்ப்புடனும், 13 நாடுகள் வாக்களிக்காமலும் டர்க்கின் இரண்டாவது பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பி.பி.சி

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *