279 ரன் வித்தியாசத்தில் இமாய வெற்றி! சம்பவம் செய்த ஹென்றி நிக்கோல்ஸ் படை

1 Min Read

ப்ளன்கெட் ஷீல்ட் போட்டியில் கன்டெர்பரி அணி 279 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ஸ் அணியை வீழ்த்தியது.

325 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர்

கன்டெர்பரி மற்றும் சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ஸ் அணிகளுக்கு இடையிலான ப்ளன்கெட் ஷீல்ட் டெஸ்ட் போட்டி ரங்கிரோவில் நடந்தது.

Canterbury won by 279 runs in plunket shield 2025-26

கன்டெர்பரி அணி முதல் இன்னிங்சில் 334 ஓட்டங்களும், சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ஸ் 221 ஓட்டங்களும் எடுத்தன.

பின்னர் 113 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய கன்டெர்பரி, 325 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

279 ரன் வித்தியாசத்தில் இமாய வெற்றி

லியோ கார்டர் 77 ஓட்டங்களும், அணித்தலைவர் ஹென்றி நிக்கோல்ஸ் 66 ஓட்டங்களும், ஜெஸ்ஸி ஃப்ளூ 53 ஓட்டங்களும் எடுத்தனர்.

439 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ஸ் 159 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக டேன் க்ளெவர் 78 ஓட்டங்கள் எடுத்தார். பிரேசர் ஷீட் 4 விக்கெட்டுகளும், சீன் டேவி மற்றும் மைக்கேல் ரே தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

கன்டெர்பரி அணி 279 ஓட்டங்கள் வித்தியாயசத்தில் இமாலய வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

Canterbury won by 279 runs in plunket shield 2025-26

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *