42 வயதில் 30 பந்துகளில் 61 ரன் விளாசல்! நொறுங்கிய இந்தியா கேப்டன்ஸ்

1 Min Read

லெஜெண்ட்ஸ் லீக் போட்டியில் சௌதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா கேப்டன்ஸை வீழ்த்தியது.

அஜித் சந்திலாவின் அபார பந்துவீச்சு

அம்ரித்சாரில் நடந்த லெஜெண்ட்ஸ் லீக் போட்டியில் சௌதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் மற்றும் இந்தியா கேப்டன்ஸ் அணிகள் மோதின.

Ajit Chandila

முதலில் களமிறங்கிய இந்தியா கேப்டன்ஸ் அணியில் அஜித் சந்திலாவின் அபார பந்துவீச்சினால் துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பர்விந்தர் அவானா அதிரடியாக 15 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 21 ஓட்டங்கள் விளாசினார். ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால், இந்தியா கேப்டன்ஸ் 18.3 ஓவர்களில் 87 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அஜித் சந்திலா 4 விக்கெட்டுகளும், ரஜத் பாட்டியா, ரவி ஜஞ்சித் மற்றும் திவேஷ் பதனியா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

ஹாமில்டன் மசகட்சா அதிரடி

பின்னர் ஆடிய சௌதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணியில் ரஜத் பாட்டியா முதல் பந்திலேயே அவுட் ஆக, புனித் பிஷ்த் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

Hamilton Mazakadza

எனினும் 42 வயதாகும் ஹாமில்டன் மசகட்சா (ஜிம்பாப்வே) அதிரடியில் மிரட்டினார். அவர் 30 பந்துகளில் 4 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்கள் விளாசினார்.

தில்ஷன் முணவீரா 18 பந்துகளில் 20 ஓட்டங்களும் எடுக்க, சௌதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி 9.2 ஓவர்களில் 88 ஓட்டங்கள் எடுத்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Hamilton Mazakadza

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *