சிவனொளிபாதமலை சுத்திகரிப்பு திட்டத்தை நிறைவு செய்தது சியபத பினான்ஸ் நிறுவனம்

1 Min Read

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, தனது 21 ஆண்டு கால நிறைவையும் உலக சுற்றுச்சூழல் தினக் கொண்டாட்டங்களுடன் இணைந்து, 2026 ஜூன் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நடைபெற்ற ‘2026 சிவனொளிபாதமலை சுத்திகரிப்பு திட்டத்தை’ வெற்றிகரமாக நிறைவு செய்தது.

இந்த ஆண்டின் முன்னெடுப்பு திருத்த மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ஒன்றாக இணைக்கபட்ட ஒருங்கிணைந்த அணுகுமுறையாக மேற்கொள்ளப்பட்டது.

இதில் ஒரே நாளில் சுமார் ஒரு டொன் அளவிலான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டதுடன், புனித ஸ்தலத்தை பாதுகாக்க சரியான கழிவு முகாமைத்துவ முறைகளை பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. மேலும் வருகை தருபவர்கள் நேரடியாக இந்த பாதுகாப்பு முயற்சியில் பங்கேற்கவும் ஊக்குவிக்கப்பட்டனர்.

இலங்கையின் மூன்றாவது பெரிய சிகர வனச் சரணாலயமான சிவனொளிபாதமலை , நாட்டின் பூர்வீகத் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களில் சுமார் 8%-, அத்துடன் அதிக எண்ணிக்கையிலான அருகிவரும் உயிரினங்களுக்கும் இயற்கை வாழ்விடமாகத் திகழ்கிறது.

இப்பகுதியின் மாறுபட்ட உயரமான மற்றும் தாழ்வான உயரங்களின் அடிப்படையில், இது தாழ்நில மழைக்காடு, துணை மலை மழைக்காடு மற்றும் மேகக்காடு என மூன்று தனித்துவமான சூழலியல் மண்டலங்களைக் கொண்டுள்ளது. மேலும், இந்த சரணாலயம், நாட்டின் மூன்று முக்கிய ஆறுகளான களனி, களு மற்றும் வளவை உட்பட, இப்பகுதியில் ஏராளமான நீர்ப்பிடிப்புப் பகுதிகளையும் உருவாக்குகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *