சர்வதேச கால்பந்து சம்மேளன (பிஃபா) தலைவர் கியானி இன்பன்டினோவின் திட்டத்தை கடுமையாக விமர்சித்த அதன் தலைமை செயற்பாட்டு அதிகாரி கெவின் லமூர் பதவி நீக்கப்பட்டுள்ளார். பிஃபா மற்றும் லமூர் உடனான தொழில் உறவு ஓகஸ்ட் 17 ஆம் திகதி தொடக்கம் முடிவுக்கு வந்ததாக பிஃபா பேச்சாளர் ஒருவர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆடவர் உலகக் கிண்ணம் உட்பட பீஃபா நடத்தும் போட்டித் தொடர்களின் பங்குகளை தனியாருக்கு விற்கும் இன்பன்டினோவின் சர்ச்சைக்குரிய திட்டத்தை லமூர் கடந்த மாதம் விமர்சித்திருந்தார். இதனை ஒரு தனி நபரின் திட்டம் என்று குறிப்பிட்ட அவர், ‘கால்பந்து நிர்வாகிகள் தங்களைத் தாங்களே கேள்வி கேட்டு, சரியான முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் இது’ என்றார். கடும் எதிர்ப்பு வெளியானதை அடுத்து பிஃபா அந்தத் திட்டத்தை கைவிட்டது. எனினும் இன்பன்டினோ பதவி வலகும்படியான அழுத்தம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிஃபாவுடன் 2024 நவம்பரில் இணைந்த லமூர், அதற்கு முன்னர் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் பிரதி பொதுச் செயலாளராக பணியாற்றி இருந்தார்.




