இலங்கையின் நீண்ட காலமாக இயங்கும் ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ், தனது பிரதான சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டமான யூனியன் அஷ்யூரன்ஸ் சுவமக ஊடாக, அனுராதபுர புனித நகரில் ஜுன் 28, 29 மற்றும் 30 ஆகிய மூன்று தினங்களில் சந்தஹிரு சேயாவிற்கு அருகாமையில் பொசொன் பருவகாலத்தை முன்னிட்டு இலவச நீரிழிவு பரிசோதனைகள் மற்றும் சுகாதார விழிப்புணர்வு செயற்பாடுகளை யாத்திரிகர்கள் மற்றும் பரந்தளவு மக்களிடையே முன்னெடுத்திருந்தது.
கருணை, தாராள குணம் மற்றும் சேவை ஆகிய நற்பண்புகளை அடிப்படையாகக் கொண்ட பொசொன் காலத்தின் உன்னத நோக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸ் இலங்கையின் மிகப்பெரிய ஆன்மீக யாத்திரையை, ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் ஆரோக்கியம் குறித்து முன்கூட்டியே விழிப்புடன் செயற்படுவதற்கான ஒரு நல்வாய்ப்பாக மாற்றியமைத்தது. இதற்கமைய, நீரிழிவு நோயை ஆரம்பத்தில் கண்டறிதல் மற்றும் அதற்கான தடுப்புப் பராமரிப்புச் சேவைகளை வழங்கும் விசேட திட்டமொன்றை முன்னெடுத்திருந்தது.




