மின்சார தயாரிப்புகளின் முன்னணி உற்பத்தியாளரும் சந்தைப்படுத்துனருமான சென்ட்ரல் இண்டஸ்ட்ரீஸ் பிஎல்சி நிறுவனத்தின் நெஷனல் பிவிசி குழாய்கள் மற்றும் பொருத்துதல்கள், நெஷனல் PE பிராண்டட் எச்டிபிஇ (HDPE) குழாய்கள் மற்றும் பொருத்துதல்கள், மற்றும் கிரிப்டன் (Krypton) ஆகிய உற்பத்திகளுக்கு நெஷனல் பிசினஸ் எக்ஸலன்ஸ் 2026 விருது விழாவில் உயர் விருதினைப் பெற்றுக் கொண்டது.
சென்ட்ரல் இண்டஸ்ட்ரீஸ் பிஎல்சி நிறுவனத்திற்கு கிடைக்கப்பெற்ற இந்த உயர் விருதினைப் பெற்றுக் கொண்டதன் ஊடாக சந்தையில் தனது தொழில்துறை ஆதிக்கத்தை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் இந்த விருது நிகழ்வில் இலங்கை வர்த்தக துறையின் தேசிய அங்கீகார விருதுகளில், கட்டிடத் துறையில் ஒன்றிணைந்த இரண்டாம் இடத்திற்கான விருதினையும் நிறுவனம் பெற்றுக்கொண்டது. மேற்படி விருதுகளுடன் சென்ட்ரல் இண்டஸ்ட்ரீஸ் பிஎல்சி நிறுவனம், uPVC குடிநீர் குழாய் உற்பத்தி மற்றும் uPVC பாகங்கள் உற்பத்திகளுக்காக முறையே SLS 147 மற்றும் SLS 659 தரச் சான்றிதழ்களை முதன்முதலில் பெற்ற நிறுவனம் என்பதை பெருமையுடன் அறிவித்துக் கொள்கிறது.
இந்த சாதனை, தரம் மற்றும் உற்பத்திககள் நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறது. சென்ட்ரல் இண்டஸ்ட்ரீஸ் பிஎல்சி நிறுவனத்தின் பல்வேறு தயாரிப்புகளின் வரிசையில் Solvent Cement, மழைநீர் முகாமைத்துவம் அமைப்பு, மின்சாரக் குழாய்கள்இ குடிநீர் குழாய்கள் மற்றும் பொருத்துதல்கள், PE தண்ணீர் தொட்டிகள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தண்ணீர் தொட்டிகள், பூந்தோட்டக் குழாய்கள், நெஷனல் பிவிசி Compact Ball-Valves, Cable Trunking, கிரீன்வுட் பிராண்ட் முகப்புப் பலகைகள் மற்றும் கிரிப்டன் மின்சார சுவிட்சுகள், சொக்கெட்டுகள் மற்றும் பாகங்கள் ஆகியவை அடங்கும். இந்த தயாரிப்புகள் உள்நாட்டு சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் பொருளாக மாத்திரமன்றி மக்கள் மத்தியில் சிறந்த பொருளாகவும் காணப்படுகிறது. இவை அனைத்தும் நிறுவனத்தின் நற்பெயருக்கு கிடைத்த வெகுமதியாக நோக்கப்படுகிறது.
‘தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கான முதல் தேர்வு’ என்ற கருப்பொருளின் கீழ் இயங்கும் சென்ட்ரல் இண்டஸ்ட்ரீஸ் பிஎல்சி, நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டிற்கு சேவை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இலங்கையிலுள்ள வாடிக்கையாளர்கள் சென்ட்ரல் இண்டஸ்ட்ரீஸ் பிஎல்சி-யின் பிராண்டுகளை அவற்றின் தரம் மற்றும் சிறந்த சேவையை உணர்ந்து கொள்வனவு செய்து வருகிறார்கள்.




