முப்பது ஆண்டுகளின் பின்னர் ஐரோப்பாவில் சூரிய கிரகணம்

1 Min Read

ஐரோப்பாவில் ஒரு தலைமுறையில் ஒருமுறை மட்டுமே ஏற்படும் சூரிய கிரகணத்தைக் காண மில்லியன் கணக்கான மக்கள் திரண்டனர்.

ஐரோப்பாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டில் இது முதல் சூரிய கிரகணமாகும். சூரியனுக்கும் பூமிக்கும் குறுக்கே நிலவு சென்று, சூரியனை ஒரு பகுதி அல்லது முழுவதுமாக மறைக்கும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

பிரிட்டனில் 90 வீதத்திற்கும் மேல் சூரியனை நிலா மறைத்துள்ளது. கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஒரு கணம் சுத்தமாக சூரியன் மறைக்கப்பட்டு பகலில் இருள் சூழ்ந்தது.

ரஷ்யாவின் சைபீரியாவில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில் ஆரம்பித்த கிரகணம் மாலையும் இரவும் சந்திக்கும் நேரத்தில் ஐஸ்லந்துக்கு வந்து பின்னர் ஐரோப்பாவை ஆட்கொண்டது.

ஸ்பெயினில் சூரியனை நிலா முற்றாக மறைத்தது 1905க்குப் பின்னர் இதுவே முதன்முறையாகும். கிரகணம் சுமார் இரண்டு நிமிடமே என்றாலும் ஐரோப்பா வியப்பில் இருந்து மீளவில்லை.

ஐரோப்பாவின் ஏனைய பகுதிகள்இ வடமேற்கு ஆபிரிக்கா மற்றும் வட அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதிகளில் பகுதியளவு சூரிய கிரகணம் தென்பட்டது. இந்த கிரகணத்தின் உச்சக்கட்டத்தின் போதுஇ நிலவு சூரியனை முழுமையாக மறைத்த நிகழ்வு 2 நிமிடங்கள் 18 வினாடிகள் வரை நீடித்தது. ஆசியாவுக்குச் சூரிய கிரகணம் 2035இல் வரும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *