அதிக ஓட்டங்கள் விளாசி லஹிரு உதார சாதனை

1 Min Read

லங்கா பிரீமியர் லீக் வரலாற்றில் லஹிரு உதார பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் மூலம் கோல் கலன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கண்டி றோயல்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

பல்லேகவில் நேற்று முன்தினம் (29) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கோல் அணி 20 ஓவர்களுக்கும் 3 விக்கெட்டுகளை இழந்து 208 ஓட்டங்களைப் பெற்றது. தொடர்ந்து பதிலெடுத்தாட வந்த கண்டி அணிக்கு ஆரம்ப வீரர் உதார 63 பந்துகளில் 15 பௌண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 132 ஓட்டங்களைப் பெற்றார்.

எல்.பி.எல். வரலாற்றில் இன்னிங்ஸ் ஒன்றில் பெறப்பட்ட அதிக ஓட்டங்களாக இது சாதனை படைத்தது. முன்னதாக 2024இல் கண்டி போல்கன் அணிக்கு எதிராக ஜப்னா கிங்ஸ் சார்பில் பத்தும் நிசங்க 119 ஓட்டங்களைப் பெற்றதே அதிகமாக இருந்தது.

உதாரவின் இந்த அதிகரடி ஆட்டத்தின் மூலம் கண்டி அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இதேவேளை கொழும்பு கெப்ஸ் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியிலும் 4 விக்கெட்டுகளால் தோல்வியை சந்தித்த தம்புள்ளை சிக்சர்ஸ் பிளே ஓப் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது.

அந்த அணி இதுவரை ஆடிய 7 போட்டி போட்டிகளில் 2 இல் மாத்திரமே வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *