இலங்கை சட்டக் கல்லூரியின் சட்ட மாணவர் பௌத்த சகோதரத்துவ மன்றத்தின் ஏற்பாட்டில், வருடாந்த இரத்ததான முகாம் ஒன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை (31) நடைபெறவுள்ளது.
இம்முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, கொழும்பு – 12 இல் அமைந்துள்ள இலங்கை சட்டக் கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
இரத்ததான நிகழ்ச்சியுடன் இணைந்து, இலவச கண் பரிசோதனை முகாம் ஒன்றும் நடத்தப்படவுள்ளது.
இதன்போது பொதுமக்களுக்கு பின்வரும் இலவச சேவைகள் வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்:
- இரத்ததானம் மூலம் உயிர்களைக் காப்பாற்றும் வாய்ப்பு
- கண் மற்றும் உறுப்பு தான உறுதிமொழியில் கையொப்பமிடும் வசதி
- குளுக்கோமா பரிசோதனை உள்ளிட்ட முழுமையான இலவச கண் பரிசோதனை
- இலவச நீரிழிவு (சர்க்கரை நோய்) பரிசோதனை
- கண்ணாடிகள் கொள்வனவில் 15% விசேட தள்ளுபடி
பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கலந்துகொண்டு, இரத்ததானம் செய்வதன் மூலமும், கண் பரிசோதனையில் ஈடுபடுவதன் மூலமும் இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




