UPDATE: ஹோமாகம, கட்டுவன தொழிற்பேட்டை தீ; ஐவர் பலி

1 Min Read

ஹோமகம, கட்டுவன தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலையில் இன்று (21) காலை ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயில் எரிந்த நிலையில் தொழிற்சாலையிலிருந்து இதுவரை 5 உடல்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் உள்ளே எவரேனும் சிக்கியிறார்களாக என கண்டறிதல் உள்ளிட்ட மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவம் இடம்பெற்ற வேளையில், 80 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொழிற்சாலைக்குள் இருந்ததாகக் தெரிவிக்கப்படுகிறது.


ஹோமாகம, கட்டுவன தொழிற்பேட்டையில் தீ (10.48am)

– முகக்கவச உற்பத்தி நிறுவன தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை

ஹோமகம, கட்டுவன தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படைத்த, கோட்டே, தெஹிவளை மாநகர சபைகளை சேர்ந்த 6 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபதப்பட்டுள்ளதாக தீ அணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *