பிஃபா உலகக் கிண்ணத்தின் நொக் அவுட் சுற்று ஆரம்பம்

1 Min Read

பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் 32 அணிகளின் நொக் அவுட் சுற்றுப் போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (29) ஆரம்பமாகிறது.

48 அணிகளுடன் ஆரம்பமான இம்முறை உலகக் கிண்ணத்தின் ஆரம்ப சுற்று போட்டிகள் தலா 4 அணிகள் கொண்ட 12 குழுக்களாக நடைபெற்றதோடு 72 குழு நிலைப் போட்டிகளை அடுத்தே நொக் அவுட் சுற்றுப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன.

இதில் குழுநிலையில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரு இடங்களைப் பிடித்த அணிகள் மற்றும் குழு நிலையில் மூன்றாம் இடத்தைப் பிடித்த சிறந்த எட்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இதன்படி இலங்கை நேரப்படி இன்று மு.ப. 12.30 இற்கு லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் தென்னாபிரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான போட்டியுடனேயே நொக் அவுட் சுற்று ஆரம்பமாகிறது. இதில் நடப்புச் சம்பியன் ஆர்ஜன்டீன அணி ஜே குழுவில் தனது அனைத்துப் போட்டிகளிலும் வெற்றியீட்டிய நிலையில 32 அணிகள் சுற்றில் கேப் வெர்டே அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டி ஜூலை 04 ஆம் திகதி இலங்கை நேரப்படி மு.ப. 3.30 இற்கு மியாமியில் நடைபெறவுள்ளது.

நொக் அவுட் சுற்றின் முழு நேர முடிவில் சமநிலை பெறும் பட்சத்தில் மேலதிகமாக 30 நிமிடங்கள் வழங்கப்படுவதோடு அதிலும் போட்டி சமநிலை பெற்றால் பெனால்ட்டி சூட் அவுட் முறை பயன்படுத்தப்படும். 32 அணிகள் சுற்றில் வெற்றிபெறும் அணி காலிறுதிக்கு முந்தைய 16 அணிகள் சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *