செம்மணி மனித புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் யாருடைவை என்பதை அடையாளம் காணும் பணிகள் கடந்த ஓராண்டு காலமாக முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இப்பகுதிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள நீதியமைச்சர் இவ்விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு உரிய தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழி பகுதியில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து 380ஆவது என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்மூலம், இலங்கையிலேயே அதிக எண்ணிக்கையான என்புத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய மனிதபுதைகுழியாகச் செம்மணி உருவெடுத்துள்ளது.
இதற்கு முன்னர் மன்னார் ‘சதொச’ புதைகுழியில் 376 என்புத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டன.




