வாகன இறக்குமதிக்கான சுங்க வரிகள் மீது தற்காலிகமாக அதிக கட்டணம் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் வாகன இறக்குமதிக்கான தினசரி வெளிநாட்டுச் செலாவணி வெளியேற்றம் 4 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் கீழ் குறைந்துள்ளதாக தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சருமான அணில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையின் பாதிப்புகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், இக்கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், ஒரேநாளில் 88 மில்லியன் அமெரிக்கன் டொலர் பெறுமதியான கடன் பத்திரங்கள் வாகன இறக்குமதிக்காகத் திறக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
எனினும், இந்த கொள்கை மாற்றமானது இறக்குமதி சார்ந்த வெளிநாட்டுச் செலாவணிச் செலவினங்களைக் குறைக்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.




