Sell-X மற்றும் TecCoop பிரதிநிதிகளின் முக்கிய சந்திப்பு இன்று

1 Min Read

இலங்கையின் அலுவலகத் தானியங்கி (Office Automation) துறையில் முன்னணியில் உள்ள இது Sell-X Office Automation (PVT) Ltd நிறுவனத்தினால் ஊடகவியலாளர் மாநாடு இன்று (23) காலை 9.30 மணியளவில் Monarch Imperial ஹோட்டலில் இடம்பெற்றது.

நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் TecCoop அமைப்புடன் இணைந்து இந்த விசேட ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளது.

நிகழ்வின்போது வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பப் போக்குகள் (Emerging Trends) மற்றும் தொழிற்துறை மேம்பாடு குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றது.

அத்தோடு, இவ்விசேட சந்திப்பின் முக்கிய நோக்கம் முக்கிய பங்குதாரர்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் முன்னிலையில் புதிய வணிகப் பங்களிப்புகளை (Partnerships) உறுதிப்படுத்துதல் மற்றும் TecCoop அமைப்பின் அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை இந்த நிகழ்வின் ஊடாக தொழிற்துறை தலைவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதலாகும்.

குறித்த நிகழ்வில் TecCoop அமைப்பின் தலைவர் டொக்டர் .D.S.K பதிரண, உப தலைவர் துசித த சில்வா, CEO ரோஹித அன்னாசிவர்ண, பணிப்பாளர் டொக்டர்.திலகா களுஆராய்ச்சி,-Sell-X Office Automation நிறுவன பணிப்பாளர் பிரதீப் ஜகொட, Sell-X Holdings நிறுவன தலைவர் சமீர போபகே, Sell-X Holdings நிறுவன பணிப்பாளர் ஹசிந்த குலரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *