திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக நிதி அமைச்சு விளக்கமளிக்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (22) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது, திறைசேரி அதிகாரிகள் சிலர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.இச்சம்பவம் குறித்து பாராளுமன்ற விசாரணை நடத்தக் கோரி, சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியிருப்பதையும் அமைச்சர் குறிப்பிட்டார்.



