ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர , சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி ருவன் ரணசிங்ஹ மற்றும் தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் கௌரவ தலைவர் (பணிப்பாளர் நாயகம்) லக்ஷ்மன் அபேசேகர ஆகியோரின் தலைமையில் கடந்த 20 ஆம் திகதி, பதுளை கெபிடல் சிட்டி ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது.
தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் தனுக லியனகமகே, பதுளை மாவட்ட மேலதிக செயலாளர் (நிர்வாகம்) சமிந்த வீரசிங்ஹ, பதுளை மாவட்ட மேலதிக செயலாளர் (காணி) நிலந்தி பிரியதர்ஷனி சமரவிக்ரம, பதுளை பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பங்கேற்புடன், வர்த்தக மற்றும் கைத்தொழில் சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஊவா மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 73 தொழில் முனைவோருக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதோடு , இந்நிகழ்வு தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை, பதுளை மாவட்ட செயலகம் மற்றும் ஊவா மாகாண வர்த்தக மற்றும் கைத்தொழில் சபை போன்ற நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.




