அரசியலுக்கு முன்னர் ராப் பாடகர்; 35 வயதில் நேபாள பிரதமர் – யார் இந்த பாலேன் ஷா?

2 Min Read

நேபாள நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் RSP கட்சி முன்னிலை பெற்று வரும் நிலையில், பாலேன் ஷா பிரதமர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

நேபாள தேர்தல்

நேபாளத்தில் கடந்த ஆண்டு சமூக ஊடக தடையை எதிர்த்து Gen-Z இளைஞர்கள் நடத்திய போராட்டத்தால் ஆட்சி கவிழ்ந்து நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி விலகினார்.

அரசியலுக்கு முன்னர் ராப் பாடகர்; 35 வயதில் நேபாள பிரதமர் - யார் இந்த பாலேன் ஷா? | Who Is Balen Shah To Nepal Pm After Gen Z Protest

இதன் பின்னர், முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி இடைக்கால பிரதமராக பதவி வகித்து அரசை நிர்வகித்து வந்த நிலையில், புதிய அரசை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற தேர்தல் கடந்த மார்ச் 5 ஆம் திகதி நடைபெற்றது.

நேபாள நாளுமன்றத்தில், மொத்தமுள்ள 275 உறுப்பினர்களில்,165 பேர் நேரடியாகவும், 110 பேர் விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த தேர்தலில், பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சி (RSP) கட்சி 32 தொகுதிகளில் வெற்றி பெற்று 87 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.

அரசியலுக்கு முன்னர் ராப் பாடகர்; 35 வயதில் நேபாள பிரதமர் - யார் இந்த பாலேன் ஷா? | Who Is Balen Shah To Nepal Pm After Gen Z Protest

இதனால், RSP கட்சி ஆட்சியமைத்து அந்த கட்சியின் பிரதமர் வேட்பாளர் பாலேன் ஷா என்று அழைக்கப்படும் பலேந்திர ஷா பிரதமர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

நேபாள பிரதமர் ஆகும் பாலேன் ஷா?

GenZ போராட்டத்தில் RSP கட்சி முக்கிய பங்கு வகுத்தது. அதைத்தொடர்ந்து இடைக்கால பிரதமர் ஆக காட்மாண்டு மேயராக இருந்த பலேந்திர ஷாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அரசியலுக்கு முன்னர் ராப் பாடகர்; 35 வயதில் நேபாள பிரதமர் - யார் இந்த பாலேன் ஷா? | Who Is Balen Shah To Nepal Pm After Gen Z Protest

ஆனால், தேர்தலில் வெற்றி பெற்று முழு பதவி காலத்திற்குப் பிரதமராகவே விரும்புவதாக கூறி அவர் மறுத்துவிட்டார்.

இதனை தொடர்ந்து, 2026 ஜனவரியில் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்த அவர், 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ரவி லாமிச்சானே தலைமையிலான RSP கட்சியில் இணைந்து பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

அரசியலுக்கு முன்னர் ராப் பாடகர்; 35 வயதில் நேபாள பிரதமர் - யார் இந்த பாலேன் ஷா? | Who Is Balen Shah To Nepal Pm After Gen Z Protest

அரசியலுக்கு வருவதற்கு முன்னர், ராப் பாடகராக இருந்த இவர், தனது பாடல்கள் மூலம் ஊழல் சமத்துவமின்மை குறித்து கேள்வி எழுப்பினார்.

2022 காட்மாண்டு மேயர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு, 61,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அரசியலுக்கு முன்னர் ராப் பாடகர்; 35 வயதில் நேபாள பிரதமர் - யார் இந்த பாலேன் ஷா? | Who Is Balen Shah To Nepal Pm After Gen Z Protest

35 வயதான பலேந்திர ஷா, காத்மாண்டுவின் நாராதேவியில் பிறந்து, காத்மாண்டுவில் சிவில் இன்ஜினியரிங் பட்டமும், இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தனது முதுகலைப் பொறியியல் பட்ட படிப்பையும் முடித்துள்ளார்.

பலேந்திர ஷா பிரதமராக தேர்வு செய்யப்பட்டால், நேபாளத்தின் இளம் பிரதமர், மிதிலா பிராந்தியத்தின் மைதிலி மொழி பேசும் சமூகத்திலிருந்து முதல் பிரதமர் போன்ற பெருமைகளை பெறுவார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *