தீவிரமடையும் அமெரிக்க- ஈரான் போர்… சில்லிட வைக்கும் நோஸ்ட்ராடாமஸின் தீர்க்கதரிசனம்

2 Min Read

நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகள் பல 2026 ஆம் ஆண்டில் நிறைவேறுவதாகக் கூறும் அவரது ஆதரவாளர்கள் தற்போது அவரது பல நூற்றாண்டுகள் பழமையான தீர்க்கதரிசனங்களை மீண்டும் வெளிக்கொண்டு வருகின்றனர்.

பதுங்கியிருந்து தாக்குதல்

16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸ் 1555 ஆம் ஆண்டு எழுதிய ‘லெஸ் ப்ராபெட்டீஸ்’ என்ற புத்தகத்தில், 9/11 தாக்குதல்கள் மற்றும் இளவரசி டயானாவின் மரணம் உள்ளிட்ட முக்கிய உலக நிகழ்வுகளை முன்னறிவித்ததாக சிலர் நம்புகின்றனர்.

தீவிரமடையும் அமெரிக்க- ஈரான் போர்... சில்லிட வைக்கும் நோஸ்ட்ராடாமஸின் தீர்க்கதரிசனம் | Us Iran War Nostradamus Prophecy

அவரது கணிப்புகள் எவையும் குறிப்பிட்ட காலகட்டத்தைக் குறிப்பவை அல்ல என்பதால், அவரது கணிப்புகளை நம்பும் பலர் தற்போது நடந்தேறும் பல சம்பவங்களும் அவர் முன்னரே கணித்துள்ளதாக நம்புகின்றனர்.

அதில் ஒன்றில், தேனீக்களின் பெரும் கூட்டம் எழும்… இரவில் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தும் என நோஸ்ட்ராடாமஸ் குறிப்பிட்டுள்ளதை ஈரானின் ட்ரோன் தாக்குதலுடன் ஒப்பிடுகின்றனர்.

இன்னொரு கணிப்பு, ஏழு மாதம் பெரும் போர், தீமையால் மக்கள் இறந்தனர், மன்னர் தோல்வியடைய மாட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை மத்திய கிழக்கில் தற்போதைய நெருக்கடி ஏழு மாதங்கள் நீளும் என நோஸ்ட்ராடாமஸ் ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.

இன்னொரு பதிவில், நட்சத்திரங்களுக்கிடையில் செவ்வாய் தனது பாதையை ஆளும்போது, ​​மனித இரத்தம் ஆலயத்தில் தெளிக்கப்படும். கிழக்குப் பக்கங்களிலிருந்து மூன்று நெருப்புகள் எழும், அதே நேரத்தில் மேற்கு அமைதியாக அதன் ஒளியை இழக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாய் பண்டைய ரோமானியர்களின் போரின் கடவுள் என்பதால், சிலர் இதை 2026ல் பெரும் போர் மூளும் அபாயத்தைக் குறிப்பிடுவதாக நம்புகின்றனர்.

உரிமை இஸ்ரேலுக்கு

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் அமெரிக்காவும் தலையிட்டு ஆறாவது நாளாக போர் தீவிரமடைந்துவரும் நிலையிலேயே நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகள் மீண்டும் பகிரப்பட்டு வருகிறது.

இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது மிக மோசமானத் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. ஈரானில் இறப்பு எண்ணிக்கை 1,000 கடந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீவிரமடையும் அமெரிக்க- ஈரான் போர்... சில்லிட வைக்கும் நோஸ்ட்ராடாமஸின் தீர்க்கதரிசனம் | Us Iran War Nostradamus Prophecy

மத்திய கிழக்கு நாடுகளில் அணு ஆயுதம் வைத்திருக்கும் உரிமை இஸ்ரேலுக்கு மட்டும் சொந்தம் என அந்த நாடு கூறி வருவதால், ஈரானிடம் ஒருபோதும் அணு ஆயுதம் இருக்க முடியாது என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ச்சியாக கூறி வருகிறார்.

மட்டுமின்றி, கடந்த ஜூன் மாதம் முன்னெடுத்த தாக்குதலில், ஈரானின் இதுவரையான அணுசக்தி திட்டத்தை மொத்தமாக அழித்துவிட்டதாக ட்ரம்ப் கூறியிருந்தார்.

ஆனால் ஈரான் அதை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சித்ததாக அவர் இந்த வாரம் தெரிவித்திருந்தார். இருப்பினும், ஈரானிடம் அணு ஆயுதங்கள் எதுவும் இருப்பதாக இதுவரை தகவல் இல்லை.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *