ஈரானின் அடுத்த உச்ச தலைவர் யார்? போட்டி ஆரம்பம்

1 Min Read

36 ஆண்டுகளாக ஈரானை ஆண்டுவந்த காமேனி என்னும் அயத்துல்லா அலி காமேனி, அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டார்.

ஈரானின் அடுத்த உச்ச தலைவர் யார்? போட்டி ஆரம்பம் | Who Will Be Iran Supreme Leader After Ali Khamenei

இந்நிலையில், அவரது இடத்தைப் பிடிக்க ஈரானில் போட்டி துவங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

ஈரானின் அடுத்த உச்ச தலைவர் யார்?

ஈரானின் உச்ச தலைவரான காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இடைக்கால தலைவராக அயத்துல்லா அலிரேசா அராஃபி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரானின் அடுத்த உச்ச தலைவர் யார்? போட்டி ஆரம்பம் | Who Will Be Iran Supreme Leader After Ali Khamenei

இந்நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்குள் ஈரானின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என ஈரான் வெளியுறவு அமைச்சரான அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்துள்ளார்.

காமேனியின் இரண்டாவது மகனான மோஜ்தபா என்பவர் (உயிரோடிந்தால்)ஈரானின் அடுத்த உச்ச தலைவராகலாம் என சில தகவல்கள் கூறுகின்றன.

அதே நேரத்தில், எதிரணியினரான, ஈரானின் தேசிய எதிர்ப்பு கவுன்சிலைச் சேர்ந்த மர்யம் ரஜவியும் தலைமறைவாக இருக்கும் பட்டத்து இளவரசரான ரெசா பஹ்லவியும் ஆட்சியமைக்கும் வாய்ப்புகாக காத்திருக்கிறார்கள்.

ஈரானின் அடுத்த உச்ச தலைவர் யார்? போட்டி ஆரம்பம் | Who Will Be Iran Supreme Leader After Ali Khamenei

இவர்களில், ரெசா பஹ்லவிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளதாக சில ஊடகவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஈரானின் அடுத்த உச்ச தலைவர் யார்? போட்டி ஆரம்பம் | Who Will Be Iran Supreme Leader After Ali Khamenei

இன்னொரு பக்கம், ஈரானின் பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்களும் ஆட்சியமைக்க போட்டிக்கு வரலாம் என கருதப்படுகிறது.

ஆக, அடுத்து என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *