புதிய தலைமுறை அணு ஆயுதங்களை உருவாக்கும் சீனா: அமெரிக்காவை கலக்கத்தில் ஆழ்த்திய தகவல்

1 Min Read

சீனா அமைதியாக புதிய தலைமுறை அணு ஆயுதங்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானிய அதிகாரிகள் பேச்சுவார்தை

ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தைகள் அனைவரது பார்வையிலும் உள்ளன.

China Building new gen nuclear weapons

இந்த சூழலில், ஈரானிய அதிகாரிகள் பேச்சுவார்தை நடத்த அழுத்தம் கொடுக்க இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக கூறினார்.

அணு ஆயுதக் கிடங்கை ஈரான் மறுத்ததால், இரு நாடுகளுக்கும் இடையில் பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் இப்போது சீனாவில் அணு ஆயுதங்களை உருவாக்குவதை அறிந்திருப்பதாக கூறப்படுகிறது.

Donald Trump

CNN-யிடம் பல பெயர் குறிப்பிடப்படாத வட்டாரங்களை இந்த விடயத்தை கூறியதாக தெரிய வந்துள்ளது. முன்னதாக, தனது அணு ஆயுத வளர்ச்சியை தற்காப்புக்கான வழிமுறையாக சீனா கூறி வந்தது.

சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர்

ஆனால், தற்போது சீனா இன்னும் தாக்குதல் உத்தியை உருவாக்கக்கூடும் என்ற சோதனையின் சான்றுகள், அமெரிக்க உளவுத்துறையினர் இடையே கவலையை எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

வல்லரசு நாடுகளில் அணு ஆயுதங்கள் வைத்திருப்பதில் மூன்றாவது இடத்தில் உள்ள சீனா (அமெரிக்கா, ரஷ்யா இரண்டு இடங்களில்) தனது ஆயுதக் களஞ்சியத்தில் முதலீடு செய்கிறது.

ஆனால், வாஷிங்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் லியு பெங்யு, “சீனாவின் அணுசக்தி கொள்கையை அமெரிக்கா சிதைத்து, களங்கப்படுத்தியுள்ளது. இது அணுசக்தி மேலாதிக்கத்தைப் பின்பற்றுவதற்கும் அதன் சொந்த அணு ஆயுதக் குறைப்பு பொறுப்புகளை தவிர்ப்பதற்கும் நோக்கமாகக் கொண்ட அரசியல் கையாளுதல்” என்று சமீபத்திய அறிக்கையை மறுத்து கூறினார்.

Xi Jinping

China Building new gen nuclear weapons

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *