போர் ஒருபக்கம்… ஆயுத ஏற்றுமதியில் பல பில்லியன் டொலர்களைக் குவிக்க திட்டமிடும் உக்ரைன்

2 Min Read

போர்க்கால வெளிநாட்டு விற்பனையை முதன்முறையாக அங்கீகரித்த நிலையில், உக்ரைன் இந்த ஆண்டு பல பில்லியன் டொலர் மதிப்புள்ள இராணுவப் பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்யக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ட்ரோன்கள் மற்றும் ஏவுகணை

அத்துடன், ஏற்றுமதிகள் மீது வரியை அறிமுகப்படுத்துவது குறித்தும் உக்ரைன் பரிசீலித்து வருவதாக உக்ரைனின் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

போர் ஒருபக்கம்... ஆயுத ஏற்றுமதியில் பல பில்லியன் டொலர்களைக் குவிக்க திட்டமிடும் உக்ரைன் | Ukraine Defence Exports Could

இந்த மாத தொடக்கத்தில், போர்க்காலத்தில் தொடர்புடைய உரிமங்களைக் கையாளும் அரசாங்க ஆணையம், பாதுகாப்புத் துறை உற்பத்தியாளர்களிடமிருந்து பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதிக்கான 40 விண்ணப்பங்களில் பெரும்பான்மையை அங்கீகரித்தது.

பொதுவாக தானியங்கள் ஏற்றுமதியில் முன்னணி நாடுகளில் ஒன்றான உக்ரைன், விளாடிமிர் புடினின் பிப்ரவரி 2022 படையெடுப்பைத் தொடர்ந்து ஆயுத ஏற்றுமதியையும் நிறுத்தியது.

ரஷ்யப் படைகளுக்கு எதிராக தன்னைப் பாதுகாத்துக் கொள்ள நேசநாடுகளின் ஆயுத விநியோகங்களை பெரிதும் நம்பியுள்ளது. அதே நேரத்தில், உக்ரைன் அதன் ஆயுதத் துறையை, குறிப்பாக ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை மேம்படுத்துவதற்கு சிறப்பு கவனம் செலுத்தியது.

மட்டுமின்றி, சமீபத்திய ஆண்டுகளில் உக்ரைன் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. வெளியான தகவலின் அடிப்படையில், ஆயத்த தயாரிப்புகள், உதிரி பாகங்கள் மற்றும் வழங்கக்கூடிய சேவைகளை கணக்கில் எடுத்துக் கொண்டால், இது பல பில்லியன் டொலர்கள் வருவாய் என்றே கூறப்படுகிறது.

போர் ஒருபக்கம்... ஆயுத ஏற்றுமதியில் பல பில்லியன் டொலர்களைக் குவிக்க திட்டமிடும் உக்ரைன் | Ukraine Defence Exports Could

ஆனால், தற்போதைய நெருக்கடியான சூழலில், தங்களின் தேவைகளை முதலில் பூர்த்தி செய்வதையே உக்ரைன் கருத்தில் கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பிராந்தியங்களைக் கைவிடும் ரஷ்ய கோரிக்கைகள் காரணமாக அமெரிக்காவால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் தேக்கமடைந்துள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளில்

அத்துடன் அமெரிக்காவால் உக்ரைனுக்கு அழுத்தமளிக்கப்பட்டும் வருகிறது. இதனிடையே, உக்ரைனின் அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பத்தைப் பெறுவதில் அதன் நட்பு நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனி, பிரித்தானியா, அமெரிக்கா, நோர்டிக் நாடுகள், மூன்று மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் குறைந்தது ஒரு ஆசிய நாடு ஆகியவை மிகவும் ஆர்வமுள்ள நாடுகளில் அடங்கும் என்றும் பட்டியலிட்டுள்ளனர்.

போர் ஒருபக்கம்... ஆயுத ஏற்றுமதியில் பல பில்லியன் டொலர்களைக் குவிக்க திட்டமிடும் உக்ரைன் | Ukraine Defence Exports Could

மேலும், உக்ரைனுடன் ஆயுத வர்த்தகத்தில் நீண்ட வரலாற்றைக் கொண்ட மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்று, ட்ரோன்கள் மற்றும் கனரக வாகனங்களில் வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாகவும், அந்த நாடு எதுவென பெயர் குறிப்பிடவும் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

ரஷ்யாவிற்கு எதிரான போரின் போது ஆதரவளித்த நாடுகளுக்கே முன்னுரிமை என்றும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பங்களில், பயன்படுத்தத் தயாராக உள்ள ஆயுதங்களை ஏற்றுமதி செய்வது எதுவும் இல்லை என்றும்,

பெரும்பாலான விண்ணப்பங்கள் தற்போதையப் போரில் பயன்படுத்த உக்ரைனுக்கு ஆயுதங்களை மீண்டும் இறக்குமதி செய்வதை நோக்கமாகக் கொண்டவை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *