யூடியூப் பிராங்க் மூலம் சகோதரர் கொலை – கிம் ஜாங் உன்னின் கோர முகம்

4 Min Read

யூடியூப் பிராங்க் மூலம் தனது மூத்த சகோதரரை கிம் ஜாங் உன் கொலை செய்துள்ளார்.

வடகொரியா வாரிசு போட்டி

வட கொரியா உலகளவில் கடும் கட்டுப்பாடு உடைய நாடுகளில் ஒன்று. இங்கு தென் கொரியா இசையை கேட்டதற்கு கூட மரண தண்டனை விதிக்கபட்டுள்ளதை கூறப்படுகிறது.

யூடியூப் பிராங்க் மூலம் சகோதரர் கொலை - கிம் ஜாங் உன்னின் கோர முகம் | Kim Jong Un Brother Nam Killed By Prank In Airport

1945 ஆம் ஆண்டில் வடகொரியா உருவானதில் இருந்து தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன்னின் குடும்பமே வடகொரியாவை ஆட்சி செய்து வருகிறது. கிம் ஜாங் உன் தற்போது 3வது தலைமுறையாக ஆட்சி செய்து வருகிறார்.

இந்நிலையில், தனது 13 வயது மகளான கிம் ஜுஏவை(Kim Ju Ae) வடகொரியாவின் அடுத்த ஜனாதிபதியாக நியமிக்க கிம் ஜாங் உன் திட்டமிட்டுள்ளதை கூறப்படுகிறது.

யூடியூப் பிராங்க் மூலம் சகோதரர் கொலை - கிம் ஜாங் உன்னின் கோர முகம் | Kim Jong Un Brother Nam Killed By Prank In Airport

சமீபகாலமாக ராணுவ அணிவகுப்புகள், ஏவுகணைச் சோதனைகள் மற்றும் சீன அதிபருடனான சந்திப்பு போன்ற முக்கிய நிகழ்வுகளில் கிம் ஜாங் உன்னுடன் கிம் ஜுஏ முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார்.

யூடியூப் பிராங்க் மூலம் சகோதரர் கொலை - கிம் ஜாங் உன்னின் கோர முகம் | Kim Jong Un Brother Nam Killed By Prank In Airport

அதேவேளையில், கிம் ஜாங் உன்னின் சகோதரி 38 வயதான கிம் யோ-ஜாங் வாரிசுரிமைக்கு போட்டியிடுவார் என கூறப்படுகிறது.

இந்த சூழலில், கிம் ஜாங் உன்னின் மூத்த சகோதரர் கிம் ஜாங்-நாம் மற்றும் அவரது மாமா ஜாங் சாங்-தேக் கொன்றது குறித்து மீண்டும் விவாதித்து வருகின்றனர்.

மாமாவிற்கு மரண தண்டனை

கிம் ஜாங் உன்னின் மாமா ஜாங் சாங்-தேக்(Jang Song-thaek) 2011 ஆம் ஆண்டில் கிம் ஜாங் உன்னுக்கு அதிகார மாற்றத்தின் போது முக்கிய வழிகாட்டியாகவும் கருதப்பட்டார். மேலும் நீண்ட காலமாக நாட்டின் 2வது நபராக அறியப்பட்டார்.

யூடியூப் பிராங்க் மூலம் சகோதரர் கொலை - கிம் ஜாங் உன்னின் கோர முகம் | Kim Jong Un Brother Nam Killed By Prank In Airport

கடந்த 2013 ஆம் ஆண்டு இவர் மீது ஆட்சி கவிழ்ப்பு சதி உள்ளிட்ட தேச துரோக குற்றம் சுமத்தப்பட்டு, இராணுவ தீர்ப்பாயத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது. துப்பாக்கி சூடு மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

யூடியூப் பிராங்க் மூலம் சகோதரர் கொலை - கிம் ஜாங் உன்னின் கோர முகம் | Kim Jong Un Brother Nam Killed By Prank In Airport

ஒரு சிலர், ஜாங் சாங்-தேக் உயிருடன் நாய்களுக்கு உணவாக்கப்பட்டதாக கூறுகின்றனர். ஆனால் இது குறித்த உறுதியான ஆதாரங்கள் இல்லை.

சகோதரர் கொலை

இதே போல், கிம் ஜாங் உன்னின் மூத்த சகோதரர் கிம் ஜாங்-நாம் வடகொரியாவின் அடுத்த ஜனாதிபதியாக வர வாய்ப்புள்ளவராக 2001 ஆம் ஆண்டு வரை கருதப்பட்டார்.

யூடியூப் பிராங்க் மூலம் சகோதரர் கொலை - கிம் ஜாங் உன்னின் கோர முகம் | Kim Jong Un Brother Nam Killed By Prank In Airport

2001 ஆம் ஆண்டில் டோக்கியோ டிஸ்னிலேண்டிற்கு போலி பாஸ்போர்ட்டுடன் செல்ல முயன்று தோல்வியடைந்ததன் மூலம் ஆட்சியை அவமானப்படுத்திய பின்னர் அவர் ஆதரவை இழந்ததாகக் கருதப்பட்டது.

2003 ஆம் ஆண்டில் வடகொரியாவை விட்டு வெளியேறிய அவர், சவுதி அரேபியா, ஜெர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வசித்து வந்தார்.

கிம் ஜாங் உன் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், அவருக்கு அனுபவமில்லை, சர்வாதிகார ஆட்சி என விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கிம் ஜாங் நாமை கொல்ல கிம் ஜாங் உன் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

அவர் மீது பல முறை கொலை முயற்சிகள் நடைபெற்றாலும் உயிர் தப்பி விட்டார். ஆனால், 2017 ஆம் ஆண்டில் மலேசிய விமான நிலையத்தில் வைத்து கொல்லப்பட்டார்.

13 பிப்ரவரி 2017 அன்று மலேசியாவின் கௌலா லும்பர் விமான நிலையத்தில் இருந்து சவுதி அரேபியாவின் மக்காவிற்கு செல்ல கிம் ஜாங் நாம் தயாராக இருந்தார்.

யூடியூப் பிராங்க் மூலம் சகோதரர் கொலை - கிம் ஜாங் உன்னின் கோர முகம் | Kim Jong Un Brother Nam Killed By Prank In Airport

அப்போது 2 இளம் வயது பெண்கள் அவர் அருகே வந்து, ஒரு திரவத்தை முகத்தில் பூசி சென்றனர்.

உடனடியாக கிம் ஜாங் நாம்மிற்கு தலைசுற்றல் மற்றும் மயக்கம் ஏற்பட விமான நிலைய அதிகாரிகளின் உதவியை நாடினர். ஆனால், சம்பவம் நடந்த 20 நிமிடங்களில் அவர் இறந்து விட்டார்.

விசாரணையில், நரம்பு மண்டலத்தை பதித்து உடனடியாக மரணத்தை ஏற்படுத்தக் கூடிய VX எனப்படும் மோசமான ரசாயனம் அவரின் முகத்தின் மீது பூசப்பட்டது தெரிய வந்தது.

சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில், இந்தோனேசியாவைச் சேர்ந்த சிட்டி ஐஸ்யா(25) மற்றும் வியட்நாமைச் சேர்ந்த டோன் தி ஹுவாங்(28) ஆகிய இரு பெண்களை கைது செய்தனர்.

யூடியூப் பிராங்க்

இவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், யூடியூப் சேனலுக்காக பிராங்க் வீடியோ எடுப்பதாகக் கூறி சிலர் தங்களை இதனைச் செய்ய வைத்ததாக மலேசிய அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

யூடியூப் பிராங்க் மூலம் சகோதரர் கொலை - கிம் ஜாங் உன்னின் கோர முகம் | Kim Jong Un Brother Nam Killed By Prank In Airport

விசாரணையில் ஐஸ்யா குறைந்தது 10 தனித்தனி சந்தர்ப்பங்களில் இதேபோன்று பிராங்க் செய்திருப்பதை உறுதிப்படுத்தினார். அதே நேரத்தில் ஹூங் 4 முறை அவ்வாறு செய்துள்ளார். இதற்காக 100 டொலர் பணம் பெற்றுள்ளனர்.

அதன் பின்னர், ஐஸ்யாவுக்கும் கொலைக்கும் துளியும் சம்பந்தமில்லை என உறுதியானதால் அவர் விடுவிக்கப்பட்டார். ஆபத்தான வேதிப்பொருளை கையாண்ட டோன் தி ஹுவாங்கிற்கு குறைந்தபட்ச தண்டனையாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் சட்டப்போராட்டம் மூலம் 2 ஆண்டுகளில் அவர் விடுவிக்கப்பட்டார்.

ஐஸ்யாவின் மொபைல் தொடர்புகளில் “ஜேம்ஸ்” என்ற புனைப்பெயரில் தோன்றிய ரி ஜி-யு என்ற வடகொரிய நபர் இருப்பது தெரிய வந்தது.

மேலும், விமான நிலைய சிசிடிவி காட்சிகளில், டிக்கெட்டை சரிபார்த்தபடி, காபி அருந்தியபடி, மொபைலில் குறுஞ்செய்தி அனுப்பியபடி 4 வடகொரிய ஏஜென்ட்கள் இருப்பது தெரியவந்தது. கொலை சம்பவம் வெற்றிகரமாக முடிந்த பின்னர் 4 பேரும் அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.

முதலில் அது கிம் ஜாங் நாம் இல்லை என வடகொரிய அரசு மறுத்தது. ஆனால் அது கிம் ஜாங் நாம் தான் என அவரது மகன் மூலம் செய்யப்பட்ட DNA பரிசோதனை மூலம் உறுதி செய்தது.

இந்த சம்பவத்தின் மூலம் மலேசியா மற்றும் வடகொரியாவிற்கு இடையேயான உறவு மோசமடைந்தது.

கிம் ஜாங் நாம் சிஐஏவின் முகவராக பணியாற்றி வந்தார் என 2019 ஆம் ஆண்டில், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்தது.

தனது அதிகாரத்திற்கு போட்டியாக இருப்பார்கள் என்பதாலயே இருவரும் கிம் ஜாங் உன்னால் கொல்லப்பட்டதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *