எதிரி நாட்டு தொடர்களை பார்த்த மாணவர்களுக்கு மரண தண்டனை – வெளியான அதிர்ச்சி தகவல்

2 Min Read

உடை உடுத்துவது தொடங்கி சிகை அலங்காரம் வரை மக்களுக்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கும் நாடு வடகொரியா.

அங்கு மக்களின் ஸ்மார்ட்போன்களை கூட அரசு கண்காணிப்பதாகவும், காதலரை குறிக்கும் OPPO என்ற வார்த்தையை வடகொரியாவில் டைப் செய்தால், அதுவாகவே Comrade என மாறிவிடும் என கூறப்படுகிறது.

எதிரி நாட்டு தொடர்களை பார்த்த மாணவர்களுக்கு மரண தண்டனை - வெளியான அதிர்ச்சி தகவல் | North Korea Executes Citizens For Watch Squid Game

இந்த நிலையில், தென் கொரிய இசை மற்றும் தொடர்களை பார்த்த மக்களுக்கு வடகொரியா பொதுவெளியில் மரண தண்டனை நிறைவேற்றியதாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கு மரண தண்டனை

2009 மற்றும் 2020 க்கு இடையில் வடகொரியாவை விட்டு வெளியேறிய 25 பேரை நேர்காணல் செய்து இந்த அறிக்கையை தயாரித்ததாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

எதிரி நாட்டு தொடர்களை பார்த்த மாணவர்களுக்கு மரண தண்டனை - வெளியான அதிர்ச்சி தகவல் | North Korea Executes Citizens For Watch Squid Game

வெளிநாட்டு செல்வாக்கைத் தடுக்க “பிற்போக்கு சிந்தனை மற்றும் கலாச்சாரத்தை ஒழிப்பதற்கான சட்டம்” என்ற சட்ட்டதை 2020 வட கொரியா அறிமுகப்படுத்தியது.

இதன்படி, தென் கொரிய நாடகங்கள், திரைப்படங்கள் அல்லது இசையைப் பார்ப்பதற்கோ அல்லது வைத்திருப்பதற்கோ 5 முதல் 15 ஆண்டுகள் வரை கட்டாய உழைப்பை கட்டாயமாக்குகிறது.

பெரிய அளவிலான உள்ளடக்கத்தை விநியோகிப்பதற்காக அல்லது அதனை பார்க்க குழுவை ஒழுங்கமைப்பதற்காக மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனைகளை பரிந்துரைக்கிறது.

சீன எல்லைக்கு அருகிலுள்ள யாங்காங் மாகாணத்தில், ஸ்க்விட் விளையாட்டைப் பார்த்ததற்காக உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஒருவர் நேர்காணல் அளித்துள்ளார்.

40 வயதான கிம் யூஞ்சு அளித்த நேர்காணலில், “நாங்கள் 16 வயதில் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் போது, ​​எங்களை அழைத்து சென்று மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை காட்டினார்கள். ‘தென் கொரிய ஊடகங்களைப் பார்த்ததற்காகவோ அல்லது விநியோகித்ததற்காகவோ மக்கள் தூக்கிலிடப்பட்டனர். நீங்கள் பார்த்தால், இது உங்களுக்கும் நடக்கும்’ என கூறினார்கள் என தெரிவித்துள்ளார்.

எதிரி நாட்டு தொடர்களை பார்த்த மாணவர்களுக்கு மரண தண்டனை - வெளியான அதிர்ச்சி தகவல் | North Korea Executes Citizens For Watch Squid Game

அதேவேளையில், செல்வாக்கான குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பணம் உள்ளவர்கள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இந்த தண்டனையில் இருந்து தப்பி விடுவதாக தெரிவித்துள்ளனர்.

சிலர் இந்த தண்டனையில் இருந்து தப்பிக்க, 5,000 – 10,000 டொலர்களுக்கு தங்களது வீடுகளை விற்று லஞ்சம் வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

கடுமையான தண்டனைகள் இருந்தாலும், Crash Landing on You என்ற நாடகம், Squid Game தொடர், BTS குழுவின் இசை ஆகியவை ரகசியமாக பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு ஊடக அணுகலை குற்றமாக்கும் சட்டத்தை ரத்து செய்யுமாறும், மரணதண்டனையை முடிவுக்குக் கொண்டுவருமாறும் வட கொரிய அதிகாரிகளை அம்னஸ்டி இன்டர்நேஷனல் வலியுறுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *