இரத்து செய்யப்படவுள்ள பாதுகாப்பு படைகளின் பணிக்குழாம் பிரதானி பதவி

1 Min Read

பாதுகாப்புப் படைகளின் பணிக்குழாம் பிரதானி/பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி பதவியை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் செப்டெம்பர் 09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ளது.

இந்த சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் அன்றையதினம் மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை இடம்பெறவுள்ளது.

அதற்கமைய வாக்கெடுப்பு கோரப்படும் நிலையில் அதே நாளில் பி.ப. 5.00 மணிக்கு இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த பதவியானது, யுத்த காலத்தில் முப்படைகளுக்கு இடையேயான கூட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் அதனை நிர்வகிக்கவும் உருவாக்கப்பட்டிருந்தது.

தற்போதைய சூழலில், குறிப்பாக பாதுகாப்புச் செலவினங்களை நிர்வகிக்கும் வகையில், இப்பதவி அவசியமில்லை எனக் கருதப்படுவதால், அதை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் செப்டெம்பர் 08 முதல் 11 வரை இடம்பெறவுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *