இங்கிலாந்துக்கு எதிராக லண்டன், லோட்ஸ் மைதனத்தில் இன்று (27) ஆதரம்பமாகும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அஸாம் அணிக்கு திரும்பும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
விரல் காயத்தால் பாதிக்கப்பட்ட அஸாம் பயிற்சியில் சிறந்த முறையில் செயற்படுவதாக அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் உமர் குல் தெரிவித்துள்ளார். துடுப்பாட்டத்தின்போது அவர் நன்றாக செயற்படுகிறார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பணத்தின்போதும் காயத்திற்கு உள்ளான பாபர் அஸாம், இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இடம்பெறவில்லை. லீட்ஸில் நடைபெற்ற அந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸால் வென்று மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 1–0 என முன்னிலை பெற்றுள்ளது.
குறிப்பாக அந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி இரண்டு இன்னிங்ஸ்களிலும் 200 ஓட்டங்களைக் கூட எட்டாத நிலையில் பாபர் அஸாம் அணிக்குத் திரும்புவது அந்த அணிக்கு பெரும் பலமாக அமையும்.
‘பாபர் வலைப் பயிற்சியில் வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களை நன்றாக எதிர்கொண்டார். போட்டியில் அவர் ஆடுவார் என்று நாம் எதிர்பார்க்கிறோம். இன்று அவர் நல்ல நிலையில் உள்ளார். அவர் துடுப்பாட்ட பயிற்சியை முழுமையாக பூர்த்தி செய்தார்’ என்று குல் தெரிவித்துள்ளார்.




