16 வயதில் CA பட்டம் பெற்று கின்னஸ் சாதனை படைத்த தமிழ் வம்சாவளி

2 Min Read

lakshmanan meyyappan as youngest ca: தமிழ் வம்சாவளியான லக்ஷ்மணன் மெய்யப்பன் 16 வயதில் CA பட்டம் பெற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

16 வயதில் CA படம் பெற்ற தமிழ் வம்சாவளி

இந்தியாவை சேர்ந்த தமிழ் வம்சாவளியான லக்ஷ்மணன் மெய்யப்பன்(lakshmanan meyyappan) என்பவர் தனது குடும்பத்துடன் துபாயில் வசித்து வருகிறார்.

தனது 10 ஆம் வகுப்பு பள்ளி விடுமுறையின் போது, ஏசிசிஏ பட்டம் பெற்ற அவரது தாயார், அடிப்படை கணக்கியல் கருத்துக்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

16 வயதில் CA பட்டம் பெற்று கின்னஸ் சாதனை படைத்த தமிழ் வம்சாவளி | Lakshmanan Meyyappan Record Youngest Ca At Age16

இதன் மூலம், கணக்கியல் மீது ஆர்வம் கொண்ட உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கணக்கியல் சான்றிதழான ACCA தகுதியைப் பெற முடிவு செய்து, ஒரு ஆண்டிலே அதற்கான தேர்வில் தேர்ச்சி பெற்று, தகுதி பெற்றார்.

அத்துடன் நில்லாமல், முதலீட்டு மேலாண்மையில் மிகவும் மதிக்கப்படும் தகுதிகளில் ஒன்றான CFA பட்டயத்தையும் அவர் பெற்றார். உலகளவில் 2 லட்சத்திற்கும் குறைவானவர்களே இந்த பட்டத்தை பெற்றுள்ளனர்.

இதன் மூலம், 16 வயது 141 நாட்களில் பட்டய கணக்காளர் பட்டம் பெற்ற உலகின் இளம் வயது ஆண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார் லக்ஷ்மணன் மெய்யப்பன்.

oxford brookes பல்கலைக்கழகத்தில் Applied science பிரிவில் Bachelor of Science பட்டம் பெற்றுள்ள அவர், தற்போது american university of sharjah ல் நிதி பிரிவில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார்.

தற்போது செஞ்சுரி ஃபைனான்சியல் நிறுவனத்தில் மூத்த ஆராய்ச்சி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.

இது குறித்து பேசிய அவர், “இந்த மைல்கல் எனக்கு மிகவும் முக்கியமானது, ஆனால் நான் தகுதிகளை ஒருபோதும் ஒரு பந்தயமாக அணுகியதில்லை. நிஜ உலகில் நிதி எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதும், காலப்போக்கில் பொருத்தமானதாக இருக்கும் திறன்களை வளர்த்துக்கொள்வதுமே முக்கியமாக இருந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *