இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பு நேற்றையதினம் (20) அவரது அமைச்சில் இடம்பெற்ற து
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.1,750 சம்பளத்தைப் பெற்றுக் கொடுத்தமைக்காக அமைச்சர் சமந்த வித்தியாரத்னவுக்கும் அரசாங்கத்திற்கும் செந்தில் தொண்டமான் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
அதிகரிக்கப்பட்ட இந்த 1,750 ரூபா சம்பளம் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுவதாகவும் தற்காலிகத் தொழிலாளர்களுக்கும் ரூ.1,750 சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
அதேவேளை, தோட்ட தொழிலாளர்களின் ரூ. 1750 சம்பளத்தில், அரசாங்கத்தால் வழங்கப்படும் ரூ. 200 கொடுப்பனவை தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வங்கி கணக்கு இல்லாத தோட்டத் தொழிலாளர்களுக்கு, வங்கி கணக்குகளை ஆரம்பிக்க தொழிற்சங்க ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் சமந்த வித்தியாரத்னவிடம் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.




