23 வயதுக்கு உட்பட்ட ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டியின் ஆண்களுக்காக 400 மீற்றர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கையின் அயோமால் பெரேரா 26 ஆண்டு கால தேசிய சாதனையை முறியடித்தார்.
சீனாவின் ஓர்டோஸ் நகரில் நேற்று முடிவுக்கு இந்தப் போட்டியில் 400 மீற்றர் தடை தாண்டல் ஓட்டத்தை அயோமால் 49.03 விநாடிகளில் நிறைவு செய்தே இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதில் சீனாவின் ஷின் ஷூ 48.68 விநாடிகளில் போட்டியை நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை வென்றதோடு மற்றொரு சீன வீரரான அனான் யே வெண்கலப் பதக்கத்தை (49.04 விநாடிகள்) வென்றார்.
இதன்போது ஆயோமால் 2000 ஆம் ஆண்டில் ஹரிஜன் ரத்நாயக்க படைத்த தேசிய சாதனையையே முறியடித்தார்.
ரத்நாயக்க அந்த ஆண்டு நடந்த ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டியின் 400 மீற்றர் தடை தாண்டலில் 49.44 விநாடிகளில் போட்டியை நிறைவு செய்ததே இதுவரை சாதனையாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் ஜித்மா விஜேதுங்க 53.10 விநாடிகளில் போட்டியை நிறைவு செய்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். இது அவரது சிறந்த காலமாகவும் இருந்தது.
இந்தப் போட்டியில் உஸ்பகிஸ்தானின் ஜொன்பிப் ஹுமுவா 51.19 விநாடிகளில் போட்டியை நிறை செய்து தங்கப் பதக்கத்தை வென்றதோடு பிலிப்பைன்ஸின் நயோமி ஜோன்சன் 52.34 விநாடிகளில் போட்டியை நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.




