ஸ்பெயினுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு தனது திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட்டிற்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்துள்ளார்.
துருக்கி நாட்டின் அங்காராவில் நடைபெறும் நேட்டோ அமைப்பு நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஸ்பெய்ன் இந்தக் கூட்டணியில் ஒரு மோசமான கூட்டாளி என்றும் அந்நாட்டுடன் தனக்கு எந்த வர்த்தகமும் வேண்டாம் என்று அவர் கூறினார்.
நேட்டோவின் புதிய பாதுகாப்புச் செலவின இலக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்திற்கு ஒப்புக்கொள்ளாத ஸ்பெயின் மீதும், ஈரான் மீதான போருக்கு தனது வான்வெளியையோ அல்லது அதன் பிரதேசத்தில் உள்ள தளங்களையோ அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்க மறுத்த அதன் சோசலிசத் தலைமை மீதும் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த நிலையில் ஜனாதிபதி ட்ரம்ப், ஸ்பெய்ன் எதற்கும் சம்மதிக்காது. நீங்கள் அவர்களுடன் வர்த்தகம் செய்யக்கூடாது’ என்று நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ருட்டேவிடம் இம்மாநாட்டின் போது கூறினார். அத்தோடு ‘நான் அவர்களுடன் எந்த வர்த்தகமும் செய்ய விரும்பவில்லை, சரியா?’ என்று அமெரிக்க திறைசேரிச் செயலாளர் பெசென்ட்டை பார்த்து ட்ரம்ப் கேட்டார். அதற்கு பெசென்ட், ‘சரி ஐயா’ என்று பதிலளித்ததோடு, ‘இதை உடனடியாக ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்களுடன் பேசக்கூட வேண்டாம். அவர்கள் திருத்த முடியாதவர்கள். அவர்கள் கெட்டவர்கள். அவர்கள் நம்முடன் சேர்ந்து நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள், ஆனால் அவர்கள் மிகக் குறைவாக சம்பாதிப்பதை நாம் உறுதி செய்யப் போகிறோம்’ என்றும் குறிப்பிட்டார். ரொய்ட்டர்ஸ்




