ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவில் இருந்து பாகிஸ்தான் கராச்சிக்கு பயணித்துக் கொண்டிருந்த சரக்கு விமானமொன்று நேற்று முன்தினமிரவு காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐந்து பணியாளர்களுடன் சென்ற கே 2 ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் 737-400 ரக சரக்கு விமானமே, கராச்சிக்கு மேற்கே சுமார் 300 கிலோ மீற்றர் தொலைவில் அரபிக்கடலுக்கு மேலே ரடாரிலிருந்து காணாமல் போயுள்ளது.
வழிசெலுத்தல் கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டிருப்பது குறித்துத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரவு வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை விமானம் இழந்ததாக பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
கராச்சிக்கு தென்மேற்கே கடலில் விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என ஆரம்பகட்ட விமானத் தரவுகள் தெரிவிக்கின்ன. அதனால் விமானத்தைக் கண்டுபிடிப்பதற்காக, பல்வேறு நிறுவனங்கள் மூலம் ஒருங்கிணைந்த தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை கடற்பரப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் விமான நிலைய அதிகார சபை கூறியுள்ளது.
டவுன் நியூஸ்




