2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர் தர (GCE A/L) பரீட்சை பெறுபேறு மீள்மதிப்பீட்டு பெறுபேறுகளை இன்று (05) அதிகாலை வெளியிடப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே விடுத்துள்ள அறிவித்தலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
பரீட்சார்த்திகள் தற்போது திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களான www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஊடாக தமது பெறுபேறுகளைச் சரிபார்த்துக் கொள்ள முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
மீள்பரிசீலனை பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் கேள்விகள் அல்லது சிக்கல்கள் உள்ள பரீட்சார்த்திகள், பாடசாலை பரீட்சைகள் மற்றும் பெறுபேறுகள் பிரிவைத் தொடர்பு கொள்ளலாம் என0 திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
உதவிக்கு 1911 நேரடி அழைப்பு இலக்கம் அல்லது 011 2784208, 011 2784537, 011 2785922 ஆகிய இலக்ககளை அழைப்பதன் மூலம் உரிய தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் என பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.




