அவதூறு வழக்கு: திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் முன்பிணை கோரி மனு

1 Min Read

முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதா கிருஷ்ணன், முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

திருச்​செந்​தூர் அருகே ஆத்​தூர் பகு​தி​யில் ஜூன் 20-ஆம் திகதி முன்னாள் முதல்​வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திமுக சார்​பில் பொதுக்​கூட்​டம் நடை​பெற்​றது.

இதில் கலந்துகொண்டு பேசிய, திருச்​செந்​தூர் தொகுதி திமுக எம்எல்​ஏ ​அனிதா ரா​தாகிருஷ்ணன், முதல்​வர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாக​வும் பேசி​ய​தாக, தவெக நகரச் செயலாளர் செல்​வம் என்பவர் ஆத்​தூர் காவல் நிலை​யத்​தில் புகாரளித்​தார். அதனடிப்படையில், அனிதா ​ரா​தாகிருஷ்ணன் மீது ஆத்தூர் போலீ​ஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனிடையே, இந்த வழக்கில் முன் பிணை கோரி, அனிதா ராதாகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், ஆளுங்கட்சியின் நடவடிக்கைகள் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு குறித்து பிரதான எதிர்க்கட்சி எம்எல்ஏ என்ற முறையில் பேசியதாகவும், அரசியல் உள் நோக்கத்துடன் தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *