இன்று (04) கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு 12 மணித்தியால நீர் விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இன்று மு.ப. 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையான 12 மணித்தியாலங்கள் அமுலில் இருக்குமெ சபை குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளில் இந்த நீர் விநியோகம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தெஹிவளை, கல்கிஸ்ஸை, இரத்மலானை, மொரட்டுவை, ராவத்தாவத்த, செய்சாபுர பகுதிகளிலும் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, பத்தரமுல்லை, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொட இராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொடை, நாவல,கொலன்னாவை, ஐடிஎச், கொட்டிகாவத்தை, அங்கொட, வெல்லம்பிட்டி, ஒருகொடவத்தை, கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ, பிலியந்தலை ஆகிய இடங்களிலும் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மின்சார விநியோகக் கட்டமைப்பின் முல்லேரியா உப மின்நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள், தெஹிவளை நீர் பம்பும் நிலையம் மற்றும் மாளிகாவத்தை லைட்ஹவுஸ் நீர் பம்பும் நிலையம் ஆகியவற்றின் மேம்படுத்தல் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.




