ரூ. 1,460 கோடிக்கும் அதிக போனஸை அறிவித்த ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப்

4 Min Read

2006 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் ரூ. 131.28 பில்லியனை மொத்த வருடாந்த போனஸ் கொடுப்பனவாக வழங்கியுள்ளது

தேசத்தின் உறுதியான மற்றும் நம்பிக்கையை வென்ற ஆயுள் காப்புறுதி சேவை வழங்குனர் எனும் வகையில் ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப் (SLICLL), 2025 ஆம் ஆண்டுக்காக தனது ஆயுள் காப்புறுதி ஒப்பந்ததாரர்களுக்கு மாபெரும் ரூ. 14.68 பில்லியன் போனஸ் கொடுப்பனவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

 

இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் அதியுயர் வருடாந்த ஆயுள் காப்புறுதி போனஸ் கொடுப்பனவாக இது அமைந்துள்ளது. இந்த பிரகடனத்தினூடாக, 2006 ஆம் ஆண்டு முதல் காப்புறுதி ஒப்பந்ததாரர்களுக்கு செலுத்தப்பட்டுள்ள மொத்த போனஸ் கொடுப்பனவுத் தொகை ரூ. 131.28 பில்லியனாக உயர்வடையும். அதனூடாக வருடாந்தம் தொடர்ச்சியாக அதியுயர் போனஸ் கொடுப்பனவை வழங்கும் ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப் நிறுவனத்தின் அசைக்க முடியாத சாதனை மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொருளாதார செயற்பாடுகள் மீட்சியை பதிவு செய்திருந்த ஆண்டில், ஒப்பற்ற மீட்சி மற்றும் நிதிசார் முன்னேற்றத்தை ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப் வெளிப்படுத்தியிருந்தது. 2025 ஆம் ஆண்டின் இறுதியில், நிறுவனத்தின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 275 பில்லியனாக பதிவாகியிருந்ததுடன், ஆயுள் நிதியம் ரூ. 247 பில்லியனாக உயர்வடைந்து, தொழிற்துறையின் மாபெரும் ஆயுள் காப்புறுதி நிதியம் எனும் தனது நிலையை தொடர்ந்தும் பேணியிருந்தது. வருடம் முழுவதிலும், சராசரியாக, மாதமொன்றில் ரூ. 1.35 பில்லியனுக்கு அதிகமான தொகை முதிர்வு மற்றும் உரிமை வழங்கல்களாக ரூ. 16.2 பில்லியனுக்கும் உயர்வான தொகையும் செலுத்தப்பட்டிருந்ததுடன், வருடாந்த போனஸ் பிரகடனத் தொகைக்கு மேலதிகமாக இந்தத் தொகைகள் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதனூடாக, நிறுவனத்தின் உறுதியான முதலீட்டு நிர்வாக மூலோபாயங்கள் மற்றும் காப்புறுதிதாரர் பாதுகாப்பில் ஒப்பற்ற அர்ப்பணிப்பு ஆகியனவும் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.

ஆறு தசாப்த காலத்துக்கு மேலாக ஜாம்பவானாக திகழும் ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப், தனது வாக்குறுதிகளை தொடர்ச்சியாக நிறைவேற்றி வந்துள்ளதுடன், இலங்கையின் பல தலைமுறையினர் மத்தியில் ஆழமான நம்பிக்கையையும் கட்டியெழுப்பியுள்ளது. பல்வேறு சவால்கள் எழுந்த போதிலும், 2025 ஆம் ஆண்டில் நிறுவனம் உயர்வான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்தது. வரிக்கு முந்திய இலாபம் ரூ. 4.3 பில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய கட்டுப்பண செலுத்தல்கள் (GWP) ரூ. 32.6 பில்லியனாக உயர்வடைந்து, 24% வருடாந்த வளர்ச்சியை எய்தியிருந்தது. புதிய வியாபார கட்டுப்பணங்களின் வருமானம்  42% இனால் அதிகரித்து ரூ. 7.56 பில்லியனாக பதிவாகியிருந்தது.

ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப்பின் மூலோபாயத்தில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய செயற்பாடு முக்கியத்துவம் பெறுகின்றது. அதனூடாக வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், சேவை நியமங்களையும் மேம்படுத்துவதற்கான நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. டிஜிட்டல் புத்தாக்கம் மற்றும் செயன்முறை முன்னேற்றங்களில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முதலீடுகளினூடாக, ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப், காப்புறுதியை அதிகம் அணுகச் செய்வதுடன், சௌகரியத்தை வழங்கி, வாடிக்கையாளர்கள் தமது சேவைகளைப் பெறும் காலத்தில் உயர்ந்த நியமத் தரங்களைப் பெற்றுக் கொள்வதை உறுதி செய்கின்றது. இந்த அர்ப்பணிப்பிற்கு மேலதிகமாக, மேம்படுத்தப்பட்ட ஆயுள் காப்புறுதி லோயல்டி வெகுமதி திட்டத்தினூடாக, காப்புறுதி ஒப்பந்ததாரர்களுக்கு, வாழ்க்கைமுறை அனுகூலங்கள் மற்றும் பரந்தளவு பிரத்தியேகமான பலன்கள் வழங்கப்படுகின்றன. அதனூடாக, காப்புறுதிக்கு அப்பால் உயர் பெறுமதியை பெற்றுக் கொடுக்கும் ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப்பின் நோக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

“தந்தையும் தாயும் போன்று” எனும் ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப் தனது வாக்குறுதிக்கமைய, அரவணைப்பு மற்றும் பராமரிப்பில் தன்னை அர்ப்பணித்துச் செயலாற்றுவதுடன், வியாபார செயற்பாடுகளுக்கு அப்பால் சென்று பரந்த சமூகங்களுக்கு பெறுமதி சேர்க்கும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளது. நிறுவனத்தின் செல்வாக்குச் செலுத்தும் கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு (CSR) செயற்பாடுகள், நாட்டின் பல பகுதிகளைச் சென்றடைந்துள்ளன. 2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட, “பாசல் பிரியந்த” திட்டத்தினூடாக, பின்தங்கிய 3365 இற்கும் அதிகமான பாடசாலைகளில், வகுப்பறைகள் புனரமைப்பு, குடிநீர் வசதிகள், நூலகங்கள் மற்றும் இதர அத்தியாவசிய கற்றல் வள வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக, 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட “சுப பெத்தும் புலமைப்பரிசில்” திட்டத்தினூடாக 2200 க்கும் அதிகமான மாணவர்களுக்கு வலுவூட்டப்பட்டுள்ளதுடன், ரூ. 240 மில்லியனுக்கு அதிகமான புலமைப்பரிசில்கள் தேசிய பரீட்சைகளில் சிறப்பான பெறுபேறுகளை பதிவு செய்திருந்த பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில், 2025 ஆம் ஆண்டில் 225 புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டிருந்தன. 2025 ஆம் ஆண்டில் உலக சிறுவர் தின செயற்பாடுகளை, தொடர்ச்சியான நான்காவது ஆண்டாகவும் நிறுவனம் முன்னெடுத்திருந்ததுடன், நாடு முழுவதையும் சேர்ந்த புதிதாக பிறந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இலவச ஆயுள் காப்புறுதிகளை வழங்கியிருந்தது.

கல்விசார் திட்டங்கள் மூலமாக தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு வழங்கிவரும் தொடர்ச்சியான பங்களிப்பைப் பாராட்டும் முகமாக, ஸ்ரீ லங்கா தலைமைத்துவ விருதுகள் 2025 நிகழ்வில், சமூகப் பொறுப்புணர்வுக்கான சிறந்த செயற்பாட்டுபிரிவின் கீழ், “கல்வியின் தரத்தை ஆதரித்தலும் மேம்படுத்தலும்” என்ற விருது வழங்கி ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப் கௌரவிக்கப்பட்டது. இந்த ஆண்டின் சாதனை அளவிலான போனஸ் அறிவிப்பானது, நிறுவனத்தின் நிலையான வாக்குறுதியான “ஏற்பாடுகளுக்கு அப்பாலான நம்பிக்கை” (Trust That Goes Beyond Measures) என்பதைப் பிரதிபலிக்கின்றது. இது நிதி வலிமை, சீரான தன்மை மற்றும் காப்புறுதி ஒப்பந்ததாரர்கள் மீதான மாறாத அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மீது கட்டியெழுப்பப்பட்ட ஒரு உறுதிப்பாடாகும். இந்த ஆண்டின் சாதனைமிகுந்த போனஸ் பிரகடனத்தினூடாக, “ஏற்பாடுகளுக்கு அப்பாலான நம்பிக்கை” எனும் நிறுவனத்தின் வாக்குறுதி பிரதிபலிக்கப்பட்டுள்ளது. தொழிற்துறையின் உறுதியான நிதி அடித்தளம் மற்றும் நிலைபேறான வியாபார வளர்ச்சி ஆகியவற்றின் பின்புலத்துடன், ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப், நீண்ட கால பெறுமதியை உருவாக்குவதில் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், இலங்கையின் ஆயுள் காப்புறுதித் தொழிற்துறைக்கு வலிமை, நம்பிக்கை மற்றும் நோக்கு ஆகியவற்றுடன் தொடர்ச்சியாக தலைமைத்துவமளிக்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *