இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விசேட தூதுக்குழுவினர், ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்காக, இன்று (25) பிற்பகல் இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது சுங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சார்பில் வருவாய் நிர்வாகப் பிரிவின் தலைவர் ஆண்ட்ரூ ஒகெல்லோ, சிரேஷ்ட பொருளாதார நிபுணர் சிண்டி நெகஸ் ,IMF இன் இலங்கைகான வருவாய் ஆலோசகர் கிரெக் டாப்பிங், பிலிப் கிரிஃபித்ஸ், பாப் ஹாமில்டன் ,மொரீன் கிட் போன்ற உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இலங்கையின் பொருளாதார மீட்சித் திட்டத்தில் சுங்கத் திணைக்களத்தின் வருமான ஈட்டல் மிக முக்கிய பங்கு வகிக்கும் பின்னணியில், இந்த உயர்மட்டக் குழுவின் வருகை மற்றும் கலந்துரையாடல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.




