நாடளாவிய ரீதியில் 3 நாள் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் கொழும்பில் ஆரம்பம்

1 Min Read

ஜனாதிபதி செயலகமும் கிளீன் ஸ்ரீலங்கா செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள நாடளாவிய ரீதியிலான 3 நாள் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் (ஜூன் 24, 25 மற்றும் 26) இன்றைய தினம் கொழும்பு மாநகர சபை வளாகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஆரம்பமானது.

கொழும்பு மாநகர சபை அதிகாரிகள், கொழும்பு மாநகர சபை சுகாதாரத் திணைக்களப் பணியாளர்கள் மற்றும் இலங்கை விமானப்படை வீரர்கள் உள்ளிட்ட பெருமளவிலானோர் முதற்கட்டமாக இதில் கலந்துகொண்டனர்.

இவ்வேலைத்திட்டத்திற்காக முப்படைகள், இலங்கை பொலிஸ், சுகாதாரம், பொது நிர்வாகம் மற்றும் மாகாண சபைகள் உள்ளடங்கலாக பல அமைச்சுக்களின் பங்களிப்பு கிடைத்துள்ளது.

இதன்போது டெங்கு அவதானம் கூடிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் (MOH Divisions) குறித்து விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளதுடன் பாடசாலைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வீட்டுத்தொகுதிகள் மற்றும் கைவிடப்பட்ட இடங்கள் ஆகியன பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *