முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஆரம்பம்

1 Min Read

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமானது நேற்றையதினம் ஆரம்பமானது. யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் ஒரு பிரிவாகவும், தமிழ் தேசியப் பேரவையினர் ஒரு பிரிவாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிப்பில் ஈடுபட்டனர்.

இதேவேளை முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற வலி நிறைந்த நினைவுகளை சுமந்தவாறு முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தியும் வடக்கு – கிழக்கு எங்கும் பயணிக்க தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், செல்வ சந்நிதி ஆலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.அதனை தொடர்ந்து ஆலய முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் இடம்பெற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *