டைம்ஸ் வெளியிட்ட 2026 ஆம் ஆண்டின் செல்வாக்கு மிகுந்த நபர்களின் பட்டியலில், தமிழகத்தை பூர்விகமாக இடம் பிடித்துள்ளனர்.
டைம்ஸ் 2026 மிகவும் செல்வாக்கு பெற்ற நபர்கள்
அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் உலக அளவில் மிகவும் செல்வாக்கு பெற்ற 100 நபர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
தற்போது 2026 ஆம் ஆண்டுக்கான உலக அளவில் மிகவும் செல்வாக்கு பெற்ற 100 நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில், அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த நபர்கள் இடம் பிடித்துள்ளனர்.

அரசியலை பொறுத்தவரை, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடா பிரதமர் மார்க் கார்னி, மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெயின்பாம், ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி, நேபாளப் பிரதமர் பலேந்திர ஷா, வங்காளதேச தலைவர் தாரிக் ரஹ்மான் நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.
தொழில்நுட்ப துறையில், கூகுள்/ஆல்ஃபபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, யூடியுப் தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகன், யூடியுபர் மிஸ்டர் பீஸ்ட் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.
மேலும், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் லியோ பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
இந்திய வம்சாவளியினர்
இந்த பட்டியலில், இந்தியாவை பூர்விகமாக கொண்ட 6 பேர் இடம் பிடித்துள்ளனர்.

கூகுள்/ஆல்ஃபபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்தவர் ஆவார்.

அமெரிக்காவில் பிறந்த யூடியுப் தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகனின் பெற்றோர்கள் தமிழர்கள் ஆவார்கள்.

அமெரிக்காவில் பிறந்த தெலுங்கு வம்சாவளியை சேர்ந்த மரபியல் வல்லுநரான கிரண் முசுனுரு, இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவர் பெற்றோர்கள் 1976 இல் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்துள்ளனர்.

அமெரிக்காவில் சமையல் கலை வல்லுநராக உள்ள விகாஸ் கண்ணா இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவர் பஞ்சாபில் பிறந்தவர் ஆவார்.

நியூயார்க் நகர மேயராக உள்ள ஜோஹ்ரான் மம்தானி, உகாண்டாவில் பிறந்தவர் ஆவார். இவரது பெற்றோர் இந்தியாவில் பிறந்தவர்கள் ஆவார்கள்.

இந்தியாவை சேர்ந்த பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர், இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.




