ரஷ்ய, ஈரானிய எண்ணெய் மீது தொடர்ந்து விலக்கு அளிக்க அமெரிக்கா மறுப்பு- இந்தியா பாதிப்பு

1 Min Read

ரஷ்ய மற்றும் ஈரானிய எண்ணெய் வாங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளில் இருந்து இனி விலக்கு அளிக்க முடியாது என அமெரிக்கா அறிவித்துள்ளது.

புதன்கிழமை (ஏப்ரல் 15) வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் இதனைத் தெரிவித்தார்.

மார்ச் 5 அன்று, இந்தியாவிற்கு 30 நாள் விலக்கு அளிக்கப்பட்டு, ரஷ்ய எண்ணெய் வாங்க அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் இன்னும் சில நாடுகளுக்கும் இந்த விலக்கு நீட்டிக்கப்பட்டது.

ஆனால் அந்த விலக்கு, ஏப்ரல் 11-ஆம் திகதி முடிவடைந்தது. தொடர்ந்து நீட்டிக்கப்பட அமெரிக்கா இப்போது மறுப்பு தெரிவித்துள்ளது.

US sanctions Russia Iran oil, India Russian oil imports 2026, US Treasury Scott Bessent oil waiver, crude oil sanctions news, global oil market impact #USSanctions #RussiaOil #IranOil #IndiaImports #GlobalOilMarket #EnergyCrisis #OilPrices

இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி மார்ச் மாதத்தில் 3 மடங்கு அதிகரித்து, 5.3 பில்லியன் யூரோ மதிப்பை எட்டியது. இதனால், இந்தியா, ரஷ்ய எரிபொருள் வாங்கியதில் இரண்டாவது பெரிய நாடாக மாறியது.

அமெரிக்க ஆற்றல் துறை செயலாளர் கிரில் ரைட், இந்த விளக்கு குறுகிய காலத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டதாகவும், சந்தையில் எண்ணெய் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் நடந்ததாகவும் விளக்கினார்.

இதன்மூலம், ரஷ்யா மீதான கொள்கையில் அமெரிக்காவிற்கு எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த முடிவு உலகளாவிய என்னை சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *