ஹோர்மூஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டால், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே முன்மொழியப்பட்ட இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்கு தான் ஒப்புக்கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், போர் நிறுத்தத்திற்கும் ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கும் முறையாக ஒப்புக்கொள்வதாக ஈரான் தெரிவித்துள்ளது.

“ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால்” போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொள்ளும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவித்துள்ளார்.
“இரண்டு வார காலத்திற்கு, ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான போக்குவரத்து சாத்தியமாகும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
“ஈரானின் ஆயுதப் படைகளுடன் ஒருங்கிணைந்து மற்றும் தொழில்நுட்ப வரம்புகளை உரிய முறையில் கருத்தில் கொண்டு,” இது நடைபெறும் என்று அவர் கூறுகிறார்.
ஈரான் ஓர் உடன்பாட்டிற்கு வர இந்திய நேரப்படி இன்று அதிகாலை வரை அமெரிக்காவால் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது, இல்லையெனில் “இன்று இரவு ஒரு முழு நாகரிகமும் அழிந்துவிடும்” என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.
“பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் இராணுவத் தலைவர் அசிம் முனீர் ஆகியோருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், இன்று இரவு ஈரானுக்கு அனுப்பப்படவிருந்த அழிவுகரமான படைகளை நிறுத்துமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர்,” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
“இஸ்லாமியக் குடியரசான ஈரான், ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகவும் உடனடியாகவும் பாதுகாப்பாகத் திறக்க ஒப்புக்கொண்டால், ஈரானுக்கு எதிரான குண்டுவீச்சு மற்றும் தாக்குதலை இரண்டு வாரங்களுக்கு நிறுத்த ஒப்புக்கொள்கிறேன்,” என்றும் அவர் கூறினார்.
“இது இரு தரப்பும் ஒப்புக்கொண்ட போர் நிறுத்தமாக இருக்கும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இதற்கான காரணம், நாங்கள் எங்கள் இராணுவ இலக்குகளை ஏற்கெனவே அடைந்துள்ளோம் என்றும், ஈரானுடன் நீண்டகால அமைதி குறித்து ஓர் ஒப்பந்தம் உருவாகும் நிலையில் உள்ளது என்றும் நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.
“ஈரானிடமிருந்து 10 அம்சங்களைக் கொண்ட ஒரு முன்மொழிவு எங்களுக்குக் கிடைத்துள்ளது. அது பேச்சுவார்த்தைக்கு ஏற்ற அடிப்படையாக இருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம்,” என்றும் அவர் கூறினார்.
“முன்பு சர்ச்சையாக இருந்த அம்சங்களில் பெரும்பாலானவை அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், இந்த 2 வார காலம் ஒப்பந்தத்தை இறுதி செய்ய உதவும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
“அமெரிக்காவின் அஸனாதிபதியாகவும், மத்திய கிழக்கு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்துபவராகவும், இந்த நீண்டகால பிரச்னை தீர்வுக்கு நெருக்கமாக இருப்பது பெருமையாக உள்ளது,” என்று அவர் கூறினார்.
ஈரான் வெளியுறவு அமைச்சர் செயத் அப்பாஸ் அராக்சி பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கையை ட்ரம்ப் தனது பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அந்த அறிக்கையில், “இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர மேற்கொண்ட முயற்சிகளுக்காக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் இராணுவத் தலைவர் அசிம் முனீர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“பாகிஸ்தான் பிரதமர் தனது சமூக வலைதள பதிவில் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலாகவும், அமெரிக்கா தனது 15 அம்ச முன்மொழிவின் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்கான கோரிக்கையை முன்வைத்ததையும், இரானின் 10 அம்ச முன்மொழிவின் பொது வடிவமைப்பு பேச்சுவார்த்தைக்கான அடிப்படையாக ஏற்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவித்ததையும் கருத்தில் கொண்டு, ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் சார்பில் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்,” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், எங்கள் இராணுவப் படைகள் தங்களது பாதுகாப்பு நடவடிக்கைகளை நிறுத்தும்,” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இரண்டு வார காலத்திற்கு, ஈரானின் ராணுவப் படைகளுடன் ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப வரம்புகளைக் கருத்தில் கொண்டு, ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான கடற்பயணம் சாத்தியமாகும்,” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஓர் ஒப்பந்தத்தை எட்டுவதற்காக ஈரானுக்கு அமெரிக்கா விதித்திருந்த கெடு முடிவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாக “போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வருகிறது” என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அறிவித்தார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வரும் நிலையில், “அனைத்து சர்ச்சைகளையும் தீர்ப்பதற்கான ஓர் உறுதியான உடன்படிக்கைக்காக மேலும் பேச்சுவார்த்தை நடத்த”, ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை அன்று இஸ்லாமாபாத்திற்கு தூதுக்குழுக்களை அழைப்பதாகவும் ஷெபாஸ் ஷெரீஃப் கூறினார்.
ஷெபாஸ் ஷெரீஃப் தனது அறிக்கையில் “ஈரான் இஸ்லாமியக் குடியரசும், அமெரிக்காவும், அவற்றின் கூட்டாளிகளுடன் சேர்ந்து, லெபனான் மற்றும் பிற இடங்கள் உட்பட எல்லா இடங்களிலும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. இது உடனடியாக அமலுக்கு வருகிறது.”
இந்த நடவடிக்கையை அவர் வரவேற்பதோடு,”இரு தரப்பினரும் குறிப்பிடத்தக்க ஞானத்தையும் புரிதலையும் வெளிப்படுத்தி, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான காரணத்தை முன்னெடுத்துச் செல்வதில் ஆக்கப்பூர்வமாக ஈடுபட்டுள்ளனர்.” என்று கூறியுள்ளார்.
“‘இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகள்’ நீடித்த அமைதியை அடைவதில் வெற்றிபெறும் என்று நாங்கள் மனப்பூர்வமாக நம்புகிறோம், மேலும் வரும் நாட்களில் கூடுதல் நல்ல செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்,” என்றும் ஷெரீஃப் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
டொனால்ட் ட்ரம்பின் இந்த முடிவெடுக்கும் செயல்பாடுகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எந்த அளவுக்கு பங்கேற்றார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அமெரிக்கா மற்றும் இரான் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வரும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், இஸ்ரேலின் தரைப்படைகள் இருக்கும் லெபனானும் இந்தப் போர்நிறுத்தத்தில் உள்ளடங்கும் எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால் ஹெஸ்பொல்லாவிடமிருந்து வரும் அச்சுறுத்தல் நீக்கப்படும் வரை லெபனானை விட்டு இஸ்ரேல் விலகாது என அந்நாட்டின் தலைமை கூறி வருகிறது.
லெபனான் அல்லது வேறு இடத்தில் தனது செயல்பாடுகளை நிறுத்த தான் ஒப்புக்கொண்டதாக இஸ்ரேலிடமிருந்து எந்த அறிகுறியும் இல்லை.
அமெரிக்கா மற்றும் ஈரான் வெற்றி கோருவதைப் போல அதே வழியில் நெதன்யாகுவால் கோர முடியும் என்பது சாத்தியமற்றதாக இருக்கிறது.
பெப்ரவரி 28ஆம் திகதி அன்று போரை அறிவித்து ஆற்றிய உரையில், “ஈரானில் ஆயதுல்லா ஆட்சியிலிருந்து வரும் அச்சுறுத்தலுக்கு முடிவு கட்டுவதே இதன் இலக்கு” என்றும் “தேவைப்படும் வரை இந்த நடவடிக்கை தொடரும்” என்றும் நெதன்யாகு பேசியிருந்தார்.
தற்போதுள்ள நிலவரப்படி ஈரான் இராணுவம் இன்னும் அச்சுறுத்தலாக இருக்க முடிகிறது மற்றும் ஈரான் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.
ஜெருசலேமில் ஏவுகணை எச்சரிக்கை மற்றும் வெடிப்புச் சத்தம் கேட்டு வருகிறது. ஈரானிலிருந்து பல ஏவுகணைகள் செலுத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறுகிறது.
ஈரான் இராணுவத்தை வீழ்த்தி மாற்றம் கொண்டு வருவதில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் திறனை நெதன்யாகு மிகையாக மதிப்பிட்டுவிட்டார்.
இன்று ட்ரம்ப் குறிப்பிட்ட “ஈரானிடமிருந்து வந்த 10 புள்ளி முன்மொழிவு” அடிப்படையில் போர் முடிவுக்கு வந்தால் அது ஈரானுக்கு ஒரு உத்தி சார்ந்த வெற்றியாகவே பரவலாக பார்க்கப்படும்.
நெதன்யாகு அமைச்சரவையின் தீவிர வலதுசாரி உறுப்பினர்கள் எந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் அல்லது போர் முடிவுக்கு வருவதை, குறிப்பாக அது லெபனானையும் உள்ளடக்கும் என்றால் அதை நிராகரிக்க வாய்ப்புள்ளது. தேர்தல் நடக்கும் ஆண்டில் அவருக்கு ஒரு அரசியல் சவாலை இது உருவாக்கலாம்.
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், இந்த போரில் தங்களின் பெரும்பாலான இலக்குகளை இரான் அடைந்துள்ளதாகவும், எதிரி வரலாற்றில் பெரிய தோல்வியை சந்தித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த போரின் தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில், ஈரானின் அதி உயர் தலைவர் அலி கமேனி மற்றும் புரட்சிகர காவல்படையின் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
இது ஈரானின் ஆட்சிக்கான இருப்பு சார்ந்த ஒரு போராகக் கருதப்பட்டது. ஈரான் கருதக்கூடும் என ஜோனெய்டி கூறுகிறார்.




